முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவிலில் நடிகை ஜோதிகா சாமி தரிசனம்

புதன்கிழமை, 27 நவம்பர் 2024      சினிமா
Jyothika 2024-11-27

திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ஜோதிகா  சாமி தரிசனம் செய்துள்ளார். 

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகரான சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்திருந்தார். கடந்த 14-ம்  தேதி வெளியா இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. பலர் இப்படத்தின் மீது எதிர்மறையான விமர்சனத்தை முன்வைத்து வந்தனர். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜோதிகா பதிவு ஒன்றை பதிவு செய்தார். அப்பதிவு இணையத்தில் வைரலானது.அதனை தொடர்ந்து நடிகர் சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 44-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் உள்ளது.  

அதை தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கும் சூர்யா 45 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பிற்கான பூஜை நேற்று மாசாணியம்மன் கோவிலில் நடைபெற்றது. 

இதற்கிடையில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து கர்நாடகாவில் உள்ள மூகாம்பிகை கோவிலில் சாமி தரிசனம் செய்திருப்பதுடன் சிறப்பு யாகமும் நடத்தியுள்ளனர். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.

அதனை தொடர்ந்து தற்போது நடிகை ஜோதிகா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். சாமி தரிசனம் செய்து விட்டு வந்த நடிகை ஜோதிகாவுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது ரசிகர் ஒருவர் சாமியின் புகைப்படத்தை பரிசாக வழங்கினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து