முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

47-வது பிறந்த நாள்: தாய், தந்தையிடம் ஆசி பெற்ற துணை முதல்வர் உதயநிதி: அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை

புதன்கிழமை, 27 நவம்பர் 2024      தமிழகம்
Udayanidhi 2024-11-27

சென்னை, 47-வது பிறந்த நாளையொட்டி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது தாய் மற்றும் தந்தையிடம் காலில் விழுந்து ஆசி பெற்றார். தொடர்ந்து அண்ணா, கருணாநிதி ஆகியோரது நினைவிடங்களில் அவர் மரியாதை செலுத்தினார். 

தி.மு.க. இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது 47-வது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடினார். இதையொட்டி காலையில் ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு சென்ற அவர் அங்கு தனது தந்தையான முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தி.மு.க. கரை வேட்டியை அணிவித்து வாழ்த்து பெற்றார்.

பதிலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உதயநிதிக்கு சால்வை அணிவித்து தோளில் கை போட்டு அரவணைத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது தாயார் துர்கா ஸ்டாலினிடமும் உதயநிதி காலில் விழுந்து ஆசி பெற்றார். அவரை துர்கா ஸ்டாலின் உச்சி முகர்ந்து வாழ்த்தினார். 

அப்போது கேக் கொண்டு வரப்பட்டு குடும்பத்தார் முன்னிலையில் உதயநிதி ஸ்டாலின் கேக் வெட்டினார். அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு மெரினா கடற்கரை சாலையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதே வளாகத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார். 

அவருடன் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன், தயாநிதி மாறன் எம்.பி., மேயர் பிரியா, மாவட்டச் செயலாளர் சிற்றரசு, எம்.எல்.ஏ.க்கள் பரந்தாமன், தாயகம் கவி, எழிலரசன், பகுதி செயலாளர் சேப்பாக்கம் மதன் மோகன், புழல் நாராயணன் கலைஞரின் உதவியாளர் நித்யா, பொதுக்குழு உறுப்பினர் பல்லாவரம் மு.ரஞ்சன், சேப்பாக்கம் பகுதி ஆதி திராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் பி.கார்த்திக் உள்ளிட்ட ஏராளமான  நிர்வாகிகள் சென்று மரியாதை செலுத்தி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

அங்கு உதயநிதி ஸ்டாலினுக்கு  நிர்வாகிகள் மாலைகள் மற்றும் புத்தகங்களை வழங்கினர்.அதன் பிறகு அங்கிருந்து பெரியார் திடலுக்கு சென்று துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அங்கு அவருக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. 

கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினர் ரோட்டின் இரு புறமும் நின்று உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். பெரியார் திடலுக்குள் திராவிட கழக தலைவர் கி.வீரமணி புத்தகம் வழங்கி வாழ்த்து கூறினார். ஏராளமான கட்சி நிர்வாகிகளும் வாழ்த்தினார்கள்.

அதன் பிறகு கோபாலபுரம் சென்று கலைஞரின் உருவப்படத்துக்கு மலர் தூவி வணங்கினார். தயாளு அம்மாள் மற்றும் குடும்பத்தாரிடமும் ஆசி பெற்றார். பின்னர் சி.ஐ.டி. காலனிக்கு சென்று ராஜாத்தி அம்மாளிடம் வாழ்த்து பெற்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து