முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதானி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: பாராளுமன்றம் 2-வது நாளாக முடங்கியது: இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

புதன்கிழமை, 27 நவம்பர் 2024      இந்தியா
Parlimanet 2024-06-30

புதுடெல்லி, அதானி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்ற இரு அவைகளும் நேற்று (நவ. 27) நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (நவ. 26) தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளே எதிர்க்கட்சிகள், அதானி விவகாரத்தை கையில் எடுத்தன. இதனால் நேற்று முன்தினம் இரு அவைகளும் முடங்கியது. தொடர்ந்து நேற்றும் இரு அவைகளிலும் அதானி விவகாரம், வக்ஃபு வாரிய சட்டத் திருத்தம், மணிப்பூர் வன்முறை உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. 

மாநிலங்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் அறிவித்தார். அதன்படி, மாநிலங்களவை இன்று (நவ. 28) காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவையின் மரபுகளை உறுப்பினர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்துவதாக ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

மக்களவை ஒத்திவைப்புக்குப் பிறகு நண்பகல் 12 மணிக்கு அவை மீண்டும் தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மக்களவையும் நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக இரு அவைகளும் முடங்கியுள்ளன.

சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அதானி குழும தலைவர் கௌதம் அதானி, அதானி க்ரீன் எனர்ஜி செயல் இயக்குநர் சாகர் அதானி உள்ளிட்டோர் மீது நியூ யார்க் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதானியை மத்திய பாஜக அரசு பாதுகாப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து