முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாமல்லபுரம் அருகே பயங்கரம்: கார் மோதிய விபத்தில் 5 பெண்கள் உயிரிழப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

புதன்கிழமை, 27 நவம்பர் 2024      தமிழகம்
Image Unavailable

Source: provided

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த பண்டிதமேடு என்ற பகுதியில் ஓஎம்ஆர் சாலையோரம் நின்றிருந்த நபர்கள் மீது கார் மோதிய பயங்கர விபத்தில் அப்பகுதியை சேர்ந்த 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பண்டிதமேடு என்ற பகுதியில் ஏராளமான கழுவேலி இடங்கள் அமைந்துள்ளன. இங்கு, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மேய்ச்சலுக்காக தங்களது கால்நடைகளை அழைத்து வருவது வழக்கம். இந்நிலையில், நேற்று பிற்பகல் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் கால்நடைகளை அழைத்துக் கொண்டு பழைய மாமல்லபுரம் (ஒஎம்ஆர்) சாலையோரம் நின்றிருந்ததாக தெரிகிறது.

அப்போது, திருப்போரூரில் இருந்து மாமல்லபுரம் நோக்கி சென்ற கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பெண்கள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில், காயமடைந்த அப்பகுதியை சேர்ந்த யசோதாம்மாள், லோகம்மால், கவுரி, விஜயா, ஆனந்தாயி ஆகிய 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்த மாமல்லபுரம் போலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

இந்த சாலையில் வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுத்துவதாகவும், இதனால் அடிக்கடி உயிரிழப்பு ஏற்படுவதாகவும் கூறி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஓஎம்ஆர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம், போலிஸார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மறியல் காரணமாக ஓஎம்ஆர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்டம், பையனூர் கிராமம், பழைய மாமல்லபுரம் சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், பழைய மாமால்லபுரம் சாலை, பையனூர் மதுரா பண்டிதமேடு சந்திப்பில் நேற்று (27.11.2024) மதியம் 2.20 மணியளவில் திருப்போரூர் வட்டம், பையனூர் கிராமம், பாளையத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த திருமதி.ஆந்தாயி (வயது 71) க/பெ.முத்தன், திருமதி.லோகம்மாள் (வயது 56) க/பெ.சின்ராஜ், திருமதி.யசோதா (வயத 54) க/பெ.கோவிந்தசாமி, திருமதி.விஜயா (வயது 53) க/பெ.சாமிநாதன் மற்றும் திருமதி.கௌரி (வயது 52) க/பெ.குப்பன் ஆகிய 5 பெண்கள் சாலையோரத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது திருப்போரூரிலிருந்து மாமல்லபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த TN11 J 7270 என்ற பதிவெண் கொண்ட கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் மேற்குறிப்பிட்ட 5 பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து