முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடஒதுக்கீடு பெறுவதற்காக மத அடையாளத்தை மாற்றுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்

புதன்கிழமை, 27 நவம்பர் 2024      தமிழகம்
Supreme-Court 2023-04-06

Source: provided

சென்னை: இடஒதுக்கீடு பெறுவதற்காக மத அடையாளத்தை மாற்றுவதை ஏற்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மதமாற்றம் என்பது உண்மையான உத்வேகம் மற்றும் நம்பிக்கை மூலம் நடைபெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

சென்னை ஐகோர்ட் கடந்த 2023-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழகத்தைச் சேர்ந்த செல்வராணி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தான் இந்து மதத்திற்கு உட்பட்ட வள்ளுவன் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்றும், எஸ்.சி. இடஒதுக்கீட்டின் கீழ் கிளார்க் பணிக்காக விண்ணப்பித்தபோது தமிழக அரசு அதை நிராகரித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தபோது, செல்வராணி கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து, ஞானஸ்நானம் பெற்றவர் என்பது உறுதி செய்யப்பட்டதால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் செல்வராணி மேல்முறையீடு செய்தார். அந்த மனு நீதிபதி பங்கஜ் மிட்டல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு செல்லும் என தீர்ப்பளித்தனர். மேலும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில், "மனுதாரர் இந்து மதத்திற்கு மாறியதாக எந்த ஆதாரமும் இல்லை. ஒருவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறும்போதே சாதி அடையாளத்தை இழந்து விடுகிறார். ஏனெனில் அந்த மதம் சாதி அமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை.

மதசார்பற்ற இந்திய நாட்டின் குடிமக்கள், எந்த மதத்தையும் பின்பற்றுவதற்கு அவர்களுக்கு முழு உரிமையும் உள்ளது. ஆனால் ஞானஸ்நானம் பெற்று, கிறிஸ்தவ நடைமுறைகளை ஏற்று வாழ்பவர், இடஒதுக்கீடு சலுகைகளுக்காக தன்னை இந்துவாக அடையாளம் காண முடியாது. இடஒதுக்கீடு பெறுவதற்காக மத அடையாளத்தை மாற்றுவதை ஒருபோதும் ஏற்க முடியாது.

மதமாற்றம் என்பது உண்மையான உத்வேகம் மற்றும் நம்பிக்கை மூலம் நடைபெற வேண்டுமே தவிர, சட்டப்பூர்வ நன்மைகளை பெறுவதற்காக அல்ல. இடஒதுக்கீடு கொள்கையை தவறாக பயன்படுத்தும் செயல்கள், விளிம்புநிலை சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்பு விதிகளின் நேர்மைக்கு தீங்கு விளைவிக்க கூடியதாகும்" என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து