முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத நம்பிக்கைக்கு நாம் முக்கியத்துவம் கொடுத்தால் சுதந்திரத்தை இழப்போம் : பார்லி.யில் திருமாவளவன் பேச்சு

சனிக்கிழமை, 14 டிசம்பர் 2024      இந்தியா
Thirumavalavan 2024-06-26

Source: provided

புதுடெல்லி : நாட்டை விட மத நம்பிக்கை மேலானது என கருதினால் இந்த தேசம் மீண்டும் சுதந்திரத்தை இழக்க நேரிடும் பாராளுமன்ற மக்களவையில்  திருமாவளவன் எம்.பி. பேசினார்.

பாராளுமன்ற மக்களவையில்  திருமாவளவன் எம்.பி பேசியதாவது:- அரசியல் ஜனநாயகத்தை வென்றெடுத்துவிட்டோம், ஆனால் சமூக ஜனநாயகமும், பொருளாதார ஜனநாயகமும் கேள்விக்குறியாக நிற்கிறது என டாக்டர் அம்பேத்கர் கூறினார். சுதந்திரம் இல்லாமல் சமத்துவமும், சகோதரத்துவமும் இங்கே நடைமுறைக்கு வராது. சமத்துவம் இல்லாமல் சுதந்திரமும், சகோதரத்துவமும் இங்கே வெற்றிகரமாக இயங்காது. எனவே, இவற்றை தனித்தனியாக பிரித்துவிட முடியாது.

சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை ஒரே நேரத்தில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தும்போதுதான் இங்கே சமூக ஜனநாயகத்தை நாம் உருவாக்க முடியும் என அம்பேத்கர் கூறுகிறார். நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்ற உணர்வை பெற வேண்டும். இது தேசம் என்ற ஒற்றை வடிவத்தை இன்னும் பெறவில்லை. நாம் அனைவரும் ஒரு தேசிய இனம் என்று கூட சொல்ல முடியாது.

அப்படிப்பட்ட நிலையில், சமூக ஜனநாயகத்தை வென்றெடுக்க அம்பேத்கர் பல்வேறு யோசனைகளை சொன்ன அதே வேளையில், தன்னுடைய ஆழ்ந்த வருத்தத்தையும் பதிவு செய்துள்ளார். இங்கே எதிர்காலத்தில் வர இருப்பவர்கள், நாட்டை விட மத நம்பிக்கை மேலானது என கருதினால் இந்த தேசம் மீண்டும் சுதந்திரத்தை இழக்க நேரிடும். இந்த தேசத்தின் சுதந்திரத்தை நாம் மீண்டும் வென்றெடுக்க முடியாத நிலை உருவாகிவிடும் என்ற கவலையை அம்பேத்கர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

75 ஆண்டுகளுக்கு முன்னால் தீர்க்க தரிசனமாக அம்பேத்கரால் உணர முடிந்திருக்கிறது. மத நம்பிக்கை உள்ளவர்களின் கைகளில் ஆட்சி அதிகாரம் சிக்கிக் கொண்டால் நாட்டை விட மத நம்பிக்கையே மேலானது என்ற நிலையை அவர்கள் உறுதிப்படுத்தக் கூடும் என்று அம்பேத்கர் சொன்னது இப்போது நடைமுறையில் இருப்பதை நம்மால் உணர முடிகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து