முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் எதிர்ப்பு

திங்கட்கிழமை, 16 டிசம்பர் 2024      தமிழகம்
Stalin 2024-12-16

Source: provided

சென்னை: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை மக்களவையில் நிறைவேற்ற பாஜக அரசு முயற்சி செய்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்த நிலையில், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஜனநாயகத்தை கொன்றுவிடும் என்றும், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும் முதல்வர்  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது; "ஒரே நாடு ஒரே தேர்தல் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. ஒரே நாடு ஒரே தேர்தல் முறை நாட்டில் ஜனநாயகத்தை கொன்றுவிடும். நாட்டின் பன்முகத்தன்மையை அழித்துவிடும். நாட்டை ஒற்றை ஆட்சி வடிவத்தின் அபாயங்களுக்குள் தள்ளும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் முறை நமது நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இந்த மசோதா நிறைவேறி அமலானால், அரசியலமைப்பு சட்டமே அர்த்தமற்றதாகிவிடும். மாநிலங்கள் உரிமையை இழந்து பிராந்திய உணர்வுகள் அழிக்கப்படும். தேர்தல் சீர்திருத்தம் என்ற போர்வையில் திணிக்கப்படும் பாஜகவின் முயற்சியை எதிர்க்க வேண்டும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நிறைவேற்ற பாஜகவிற்கு பெரும்பான்மை இல்லை. பெரும்பான்மை இல்லாதபோதும் மசோதாவை கொண்டுவந்து பிரச்சினைகளை திசைதிருப்ப பாஜக முயற்சிக்கிறது. இந்தியாவின் பன்முகத்தன்மை, அரசியலமைப்பையும் காப்பாற்ற ஜனநாயக சக்திகள் போராட வேண்டும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து