முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் திசநாயகா பிரதமர் மோடியுடன் சந்திப்பு

திங்கட்கிழமை, 16 டிசம்பர் 2024      இந்தியா
Dissanayake 2024-12-16

Source: provided

புதுடெல்லி: 3 நாட்கள் அரசுமுறை  பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் திசநாயகா பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசினார். அப்போது தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் அநுர குமார திசநாயகா வெற்றி பெற்றார். இதையடுத்து, இலங்கையின் 9-வது அதிபராக திசநாயகா பதவியேற்றார். இலங்கையின் அதிபராக அநுர குமார பதவியேற்ற பிறகு, முதல் வெளிநாட்டு பயணமாக முதல்முறையாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.

3 நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்த அநுர குமாரவை நேற்று முன்தினம் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்றனர். அதன் பிறகு, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் இலங்கை அதிபர் அநுர குமாரவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த நிலையில், நேற்று பிரதமர் மோடியை இலங்கை அதிபர் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, தமிழக மீனவர்கள் பிரச்சனை, இலங்கை தமிழர்களுக்கான பல்வேறு கோரிக்கைகள் ஆகியவற்றை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக, இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகாவுக்கு ஜனாதிபதி மாளிகையில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து