முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பை போற்றுவோம் பாக். போர் வெற்றி தினத்தில் பிரதமர் புகழாரம்

திங்கட்கிழமை, 16 டிசம்பர் 2024      இந்தியா
Modi 2024-12-16

Source: provided

புதுடில்லி: இந்திய ராணுவ வீரர்களின் தன்னலமில்லா அர்ப்பணிப்பும், அசைக்க முடியாத உறுதியும், நாட்டை பாதுகாத்து நமக்கு பெருமை சேர்த்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

1971ம் ஆண்டு வங்கதேசம் தனிநாடாக பிரிந்த போது, பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா பெற்றி பெற்றது. இந்த நாளை விஜய் திவாஸ் என்று ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் போரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.

அந்த வகையில், விஜய் திவாஸை முன்னிட்டு பிரதமர் மோடி, ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '1971ம் ஆண்டு இந்தியாவின் வரலாற்று வெற்றிக்காக தியாகம் செய்த தைரியமிக்க ராணுவ வீரர்களை இந்நாளில் போற்றுவோம்.

இந்திய ராணுவ வீரர்களின் தன்னலமில்லா அர்ப்பணிப்பும், அசைக்க முடியாத உறுதியும் நம்முடைய நாட்டை பாதுகாத்து நமக்கு பெருமை சேர்த்துள்ளது. அவர்களின் அசாதாரண வீரம் மற்றும் ஆன்மாவுக்கு அஞ்சலி செலுத்துவோம். இவர்களின் தியாகம் இளைய தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும்,' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து