முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ள நிவாரணம் கோரி கடலூர், விழுப்புரத்தில் மக்கள் போராட்டம்

திங்கட்கிழமை, 16 டிசம்பர் 2024      தமிழகம்
villupuramrain-2024-12-16

விழுப்புரம், வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அண்மையில் தமிழகத்தை தாக்கிய பெஞ்சல் புயல் காரணமாக, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வெள்ள பாதிப்பு பணிகளை மேற்கொண்ட தமிழக அரசு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரேஷன் அட்டை அடிப்படையில் ரூ.2 ஆயிரம் வழங்குவதாக அறிவித்தது.

இந்நிலையில், தங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கவில்லை எனக் கூறி, விழுப்புரம் மாவட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஓமந்தூர், உப்புவேலூர், கிளியனூர், வடசிறுவலூர், ஆதனப்பட்டு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் நேற்று (டிச.,16) திண்டிவனம் - புதுச்சேரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், நீண்ட வரிசைக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர், தகவல் அறிந்து வந்த போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நிவாரணத்தைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்த பின்பு போராட்டம் கைவிடப்பட்டது. அதேபோல, கடலூர் சன்னியாசிபேட்டையிலும் ரூ.2000 வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி ஏராளமான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கலைந்து போகச் சொல்லியும் கேட்காத அவர்களை, வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே பலர் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியவர்களையும் இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து