முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துபாயில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட 1.7 கி. மதிப்பில் தங்கம் பறிமுதல்

திங்கட்கிழமை, 16 டிசம்பர் 2024      தமிழகம்
Gold 2024-08-26

Source: provided

சென்னை : துபாயில் இருந்து ரூ.1.4 கோடி மதிப்புடைய 1.7 கிலோ தங்கத்தை, ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், சென்னைக்கு கடத்தி வந்த சம்பவத்தில், விமான ஊழியர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தங்கம் கடத்தி வந்த பயணி மற்றும் விமான நிறுவனத்தின் ஊழியர் ஆகிய இரண்டு பேரை, சுங்கத்துறை அதிகாரிகள், சென்னை விமான நிலையத்தில் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள். துபாய்யிலிருந்து சென்னை வரும் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், பெரிய அளவில் கடத்தல் தங்கம் கொண்டுவரப்படுவதாகவும், அந்த தங்கத்தை விமான ஊழியர் ஒருவரே எடுத்து வருவதாகவும், சுங்கச் சோதனை இல்லாமல், வெளியில் எடுத்துச் செல்ல கடத்தல் கும்பல் திட்டமிட்டுள்ளதாகவும், சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதை அடுத்து சுங்கத்துறையினர் விமானத்தில் பணியாற்றிய விமான ஊழியர்களை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்களில் 26 வயது ஆண் ஊழியர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதை அடுத்து, அவரை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, தனி அறையில் முழுமையாக பரிசோதித்தனர். அப்போது அந்த ஊழியர் அணிந்திருந்த பேண்ட் பெல்ட் அணியும் பகுதியில் 4 தங்கக் கட்டிகள் மறைத்து வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர். 

அந்த தங்க கட்டிகளின் மொத்த எடை 1.7 கிலோ. அதன் சர்வதேச மதிப்பு ரூ.1.4 கோடி என்பது தெரிய வந்துள்ளது. அவர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. முதற்கட்ட விசாரணையில், ஒரு விமானப் பயணிதான் அவரிடம் தங்கக் கட்டிகளைக் கொடுத்ததாகத் தெரிய வந்ததைத் தொடர்ந்து, குடியுரிமை சோதனை பிரிவில் நின்று கொண்டிருந்த, அந்த கடத்தல் பயணியையும் சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து