எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் 37-வது ஆண்டு நினைவு நாளான டிச.24ம் தேதி மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளதாக, அக்கட்சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது.,
அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர்., நம்மை ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டு அமரர் ஆகிய நாள் 24.12.1987.எம்ஜிஆரின் 37-வது ஆண்டு நினைவு நாளான டிச.24ம் தேதி செவ்வாய் கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.
தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும் மரியாதை செலுத்த உள்ளனர். அதனைத் தொடர்ந்து, எம்ஜிஆரின் நினைவிட நுழைவு வாயில் உட்புறத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சிகளில், கட்சியின் சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளும், எம்.ஜி.ஆர். மன்றம், அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கட்சியின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கட்சியினரும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
எம்ஜிஆரின் நினைவு நாளான டிச.24 அன்று, எம்.ஜி.ஆர். உடைய நினைவுகளை நெஞ்சில் சுமந்துள்ள, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு; மாநகராட்சிப் பகுதி, வட்ட அளவில், கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கட்சியினரும், தங்கள் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள எம்ஜிஆரின் உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்தும்; ஆங்காங்கே எம்ஜிஆருடைய உருவப் படங்களை வைத்து மாலை அணிவித்தும், மலர் அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் செய்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
கட்சி அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், டிச.24 அன்று எம்ஜிஆரின் உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்தும்; ஆங்காங்கே எம்.ஜி.ஆர். உடைய திருஉருவப் படங்களை வைத்து மாலை அணிவித்தும் மலர் அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 8 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 2 weeks ago |
-
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு மேலும் ரூ. 400 கோடி ஒதுக்கீடு
18 Dec 2024சென்னை: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசால் மேலும் ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-
மதுவிலக்கு பிரிவு என்ன செய்துகொண்டிருக்கிறது? கள்ளச்சாராய வழக்கில் ஐகோர்ட் கேள்வி
18 Dec 2024சென்னை: மதுவிலக்கு பிரிவு என்ன செய்துகொண்டிருக்கிறது? என்று கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
-
பார்லி.யில் அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேச்சு: மன்னிப்பு கேட்கக்கோரி எதிர்க்கட்சியினர் அமளி
18 Dec 2024டெல்லி: பாராளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதற்கு மன்னிப்பு கேட்கக்கோரி எதிர்க்கட்சியினர் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர்.
-
அமைச்சர் பொறுப்பை கவனியுங்கள்: அம்பேத்கர் பற்றி அமித்ஷா பேச்சுக்கு துணை முதல்வர் உதயநிதி கண்டனம்
18 Dec 2024சென்னை: அம்பேத்கர் குறித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷன் மாஸ்டருக்கு மத்திய அரசின் விருது
18 Dec 2024தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷன் மாஸ்டருக்கு மத்திய அரசின் உயரிய விருது வழங்கப்படவுள்ளது.
-
கேரளாவில் முன் அனுமதியின்றி பணிக்கு வராத 36 அரசு டாக்டர்கள் பணி நீக்கம்
18 Dec 2024திருவனந்தபுரம்: கேரளாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்றி, பணிக்கு வராமல் இருந்த 36 அரசு டாக்டர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
தமிழக கூட்டுறவுத்துறை சார்பில் பொங்கல் சிறப்பு தொகுப்பு விற்பனை தொடங்கியது
18 Dec 2024சென்னை: தமிழக கூட்டுறவுத் துறை சார்பில் பொங்கல் சிறப்புத் தொகுப்பு விற்பனையை அமைச்சர் பெரியகருப்பன் நேற்று தொடங்கி வைத்தார்.
-
திருச்சியில் கலைஞர் நூலகம் அமைக்க ரூ.290 கோடி ஒதுக்கிய முதல்வருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் நன்றி
18 Dec 2024சென்னை: திருச்சியில் கலைஞர் நூலகம் அமைக்க ரூ.290 கோடி ஒதுக்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் நன்றி தெரிவித்துள்ளார்.
-
காஷ்மீரில் சோகம்: வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழப்பு-4 பேர் காயம்
18 Dec 2024கத்துவா: காஷ்மீரில் வீடு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
அம்பேத்கர் விவகாரத்தில் நாடகமாடும் காங். கட்சி பிரதமர் போடி விமனர்சனம்
18 Dec 2024டெல்லி: பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் பேசிய அமித்ஷா, 'அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்' என முழக்கமிடுவது இப்போது பேஷன் ஆகிவிட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-12-2024.
18 Dec 2024 -
அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேச்சு: ஆதவ் அர்ஜூனா கண்டனம்
18 Dec 2024சென்னை: அம்பேத்கர் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு ஆதவ் அர்ஜூனா கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
பாவம் செய்பவர்கள்தான் புண்ணியம் பற்றி கவலை: மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம்
18 Dec 2024சென்னை: அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தை பற்றிக் கவலைப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சுக்கு முதல்வர் மு.க.
-
தியேட்டர் நெரிசல் சம்பவத்தில் தாய் இறந்த நிலையில் மகனும் மூளைச்சாவு
18 Dec 2024ஐதராபாத்: புஷ்பா 2 படம் வெளியான திரையரங்கு கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
-
ஃபெஞ்சல் புயல்: இழப்பீடு வழங்கக்கோரி வரும் 21-ம் தேதி விழுப்புரத்தில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
18 Dec 2024சென்னை: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்காத திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் வரும் 21ம் தேதி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எத
-
வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வுப்பகுதி 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
18 Dec 2024சென்னை: வங்கக்கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றதாக தெரிவித்தள்ள வானிலை ஆய்வு மையம், தமிழகக் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ.
-
37-ம் ஆண்டு நினைவு நாள்: டிச. 24-ம் தேதி நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை
18 Dec 2024சென்னை: மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் 37-வது ஆண்டு நினைவு நாளான டிச.24ம் தேதி மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில், அ.தி.மு.க.
-
வெளிநாட்டு படையை நம்பியிருக்கிறார்கள்: ரஷ்யா மீது உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு
18 Dec 2024கீவ், டிச: 'போரில் தாக்குதல் நடத்த வட கொரியா படைகளை ரஷ்யா பயன்படுத்துகிறது.
-
ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பில் இணைய மோசடிகள் தடுப்பு மத்திய அமைச்சர் சிந்தியா தகவல்
18 Dec 2024புதுடெல்லி: நாட்டில் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான இணைய மோசடிகள் தடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
-
கவர்னர் மாளிகை முன்பு காங்கிரசார் முற்றுகை போராட்டம்: 300 பேர் கைது
18 Dec 2024சென்னை : கவர்னர் மாளிகை முன்பு காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் செல்வப்பெருந்தகை உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
இந்திய பொருட்களுக்கு அதிக வரி விதிப்போம் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை
18 Dec 2024நியூயார்க்: அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் இந்தியா, அதேபோல் நாங்கள் இந்திய பொருட்களுக்கும் அதிக வரி விதிப்போம் என்று டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள
-
புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷ்யா : அடுத்த ஆண்டு முதல் பயன்பாட்டிற்கு வரும்
18 Dec 2024மாஸ்கோ : ரஷ்யா கண்டுபிடித்துள்ள தடுப்பூசி அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் பொது பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
குகேஷின் பரிசுத்தொகைக்கு 4 கோடி ரூபாய் வரிபிடித்தம்? மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி. கடிதம்
18 Dec 2024சென்னை, உலக செஸ் சாம்பியன் குகேஷ் பரிசுத் தொகைக்கு ரூ.4 கோடி வரியா என மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
-
ஒரே நாடு, ஒரே தேர்தல்: கூட்டுக்குழுவுக்கு காங். சார்பில் பிரியங்கா பெயர் பரிந்துரை
18 Dec 2024டெல்லி : பாராளுமன்ற கூட்டுக்குழுவுக்கு பிரியங்காவை காங்கிரஸ் பரிந்துரைத்துள்ளது.
-
மொழி சிறுபான்மை பள்ளிகளில் பொதுத்தேர்வில் தமிழ் பாடம் எழுதுவதில் இருந்து விலக்கு : தமிழ்நாடு அரசு விளக்கம்
18 Dec 2024சென்னை : மொழி சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாட தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.