முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி.யில் அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேச்சு: மன்னிப்பு கேட்கக்கோரி எதிர்க்கட்சியினர் அமளி

புதன்கிழமை, 18 டிசம்பர் 2024      இந்தியா
Parliment--

Source: provided

டெல்லி: பாராளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதற்கு மன்னிப்பு கேட்கக்கோரி எதிர்க்கட்சியினர் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

அரசியலமைப்பு மீதான விவாதம் நேற்று முன்தினம் மாநிலங்களவையில் நடைபெற்றது. அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது 'அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்' என முழக்கமிடுவது இப்போது பேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால் சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று பேசினார்.

அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். நேற்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியதும் இது தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் 2 மணிக்கு அவை மீண்டும் கூடியது. அப்போதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள். அமித் ஷா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை இன்று காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல் மாநிலங்களவையும் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கிய நிலையில் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு மீண்டும் அவை தொடங்கியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட அவை இன்று காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து