முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய பொருட்களுக்கு அதிக வரி விதிப்போம் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை

புதன்கிழமை, 18 டிசம்பர் 2024      உலகம்
Trump

Source: provided

நியூயார்க்: அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் இந்தியா, அதேபோல் நாங்கள் இந்திய பொருட்களுக்கும் அதிக வரி விதிப்போம் என்று டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்தியாவின் வரி விதிப்பு நடைமுறைகளை கடுமையாக விமர்சித்து உள்ளார். சில அமெரிக்க பொருட்களுக்கு 100 சதவீதம் அளவுக்கு வரி விதிக்கப்படுகிறது என அவர் சுட்டி காட்டினார்.

தொடர்ந்து இந்தியா இதுபோன்று அதிக வரிகளை விதித்தால், நாங்களும் பதிலடியாக அதே அளவுக்கு வரிகளை விதிக்கும் பழிக்கு பழி திட்ட அணுகுமுறையை கையிலெடுப்போம் என மிரட்டலாக கூறினார். அமெரிக்காவின் வர்த்தக கூட்டாளிகளாக உள்ள சீனா, மெக்சிகோ மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளுடனான வர்த்தக உறவுகள் பற்றிய விரிவான உரையாடலின்போது, டிரம்ப் இதனை கூறியுள்ளார்.

இந்தியா நிறைய வரிகளை விதிக்கிறது. பிரேசிலும் அதிக வரி விதிக்கிறது. அவர்கள் அதிக வரிகளை விதிக்க விரும்புகிறார்கள் என்றால், அதன்படி செயல்படட்டும். ஆனால், நாங்களும் அதே அளவுக்கு வரி விதிப்போம். வர்த்தகத்தில் வெளிப்படை தன்மை என்பது தன்னுடைய பொருளாதார கொள்கையின் முக்கிய விசயம் என அவர் அழுத்தி கூறினார்.

இந்தியா மட்டுமின்றி சீனா, மெக்சிகோ மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளுடனான வர்த்தக விவகாரங்களை பற்றியும் டிரம்ப் குறிப்பிட்டு உள்ளார். இதனால், அவருடைய அடுத்த அரசில், பொருளாதார கொள்கைகளின் முக்கிய விசயங்களில் ஒன்றாக கூடுதல் வரி விதிப்பது இருக்கும் என அவர் தெளிவுப்படுத்தி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து