முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ் எழுத்தாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு சாகித்திய அகாதெமி விருது

புதன்கிழமை, 18 டிசம்பர் 2024      இந்தியா
Awards 2023 06 23

Source: provided

சென்னை : தமிழ் பேராசிரியர், எழுத்தாளர் ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு இந்த ஆண்டின் சாகித்திய அகாதெமி விருது அறிவித்துள்ளது.

தமிழ் பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதிய திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908 நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்களின் பட்டியல் நேற்று வெளியாகியிருக்கிறது. அதன்படி, வரலாற்றுப் பேராசிரியர், எழுத்தாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதிய திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908- என்ற நூலுக்கு 2024-ம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

1908-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி வ.உ.சி. கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறையின் தொடர்ச்சியாக மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டது. இந்த எழுச்சி குறித்தும், அதன் விளைவுகளையும் இந்த நூல் விரிவாக ஆராயும் வகையில் அமைந்திருக்கிறது.

திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சியும் 1908 நூலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டிருப்பதற்கு பல்வேறு துறை தலைவர்களும் எழுத்தாளர்களும் ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் வெளியிட்டு வருகிறார்கள்.

சுதந்திரத்திற்கு முன்பு நடந்த எழுச்சிகளில் மிகவும் முக்கியமானது 1908-ல் நடந்த திருநெல்வேலி எழுச்சி. நெல்லையிலும் தூத்துக்குடியிலும் அப்போது ஏற்பட்ட மக்கள் எழுச்சியையும் அதன் தாக்கத்தையும் பல அரிதான தகவல்களுடன் எடுத்துச் சொல்லும் ஆய்வு நூல் 'திருநெல்வேலி எழுச்சியும் வ.உசி.யும் 1908' என்று சு. வெங்கடேசன் எம்.பி. புகழ்ந்துள்ளார்.

மத்திய அரசின் சார்பில், நாட்டில் உள்ள 21 மொழிகளில் வெளியாகும் சிறந்த படைப்புகளை தேர்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு எட்டு கவிதைப் புத்தகங்கள், 3 நாவல்கள், 2 சிறுகதைகள், 3 கட்டுரைகள், 3 இலக்கிய விமர்சனங்கள், 1 நாடகம் மற்றும் 1 ஆய்வுப் புத்தகங்களுக்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது பெறுவோருக்கு பதக்கமும், ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.

அந்த வகையில், 2024-ம் ஆண்டுக்கான விருதாளர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழ் பிரிவில் திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யு - 1908 என்ற ஆய்வு நூலை எழுதிய தமிழ் பேராசிரியர் ஏ.ஆர். வெங்கடாசலபதிக்கு சாகித்திய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து