முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மொழி சிறுபான்மை பள்ளிகளில் பொதுத்தேர்வில் தமிழ் பாடம் எழுதுவதில் இருந்து விலக்கு : தமிழ்நாடு அரசு விளக்கம்

புதன்கிழமை, 18 டிசம்பர் 2024      தமிழகம்
TN 2023-04-06

Source: provided

சென்னை : மொழி சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாட தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

2024-25 கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற மார்ச் மாதம் 28-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 15-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடம் கட்டாயம் இல்லை என கல்வித்துறை அறிவித்துள்ளது என்றும், சிறுபான்மை மொழிகளில் தேர்வை எழுதிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வேகமாக பரவி வருகிறது. இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதனை தமிழக அரசு மறுத்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், "பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடம் கட்டாயமில்லை என அரசு அறிவித்ததாக பொய் பரப்பப்படுகிறது. தமிழக அரசு கடந்த 2006-ம் ஆண்டு கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தின் மூலம் அனைத்து வகையான பள்ளிகளிலும் முதல் பாடமாக தமிழ் அறிவிக்கப்பட்டது.

இதுதொடர்பான வழக்கில் மொழிவாரி சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாட தேர்வு எழுதுவதில் இருந்து 2020 முதல் 2022-ம் ஆண்டு வரை சென்னை ஐகோர்ட்டு விலக்கு அளித்து இருந்தது. இதை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட்டு தேர்வில் விலக்கு என்பது 2023-ம் ஆண்டுக்கும் பொருந்தும் என தீர்ப்பளித்துள்ளது.

இந்த நிலையில், மொழி சிறுபான்மை பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் நியமனங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தமிழக மொழி சிறுபான்மை பேரவையினரின் கோரிக்கையை ஏற்று 2023-24 கல்வியாண்டுக்கு மட்டும் கட்டாய மொழிப்பாடமான தமிழ் தேர்வு எழுதுவதில் விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதை பொதுவாக அனைத்து மாணவர்களுக்கும் அறிவித்ததாக தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இதுபோன்ற தகவல்களை நம்பவேண்டாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து