முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷ்யா : அடுத்த ஆண்டு முதல் பயன்பாட்டிற்கு வரும்

புதன்கிழமை, 18 டிசம்பர் 2024      உலகம்
Russia 2024-12-18

Source: provided

மாஸ்கோ : ரஷ்யா கண்டுபிடித்துள்ள தடுப்பூசி அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் பொது பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றான புற்றுநோயை குணப்படுத்தவும், பரவாமல் தடுக்கவும் பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் mRNA அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்ய சுகாதாரத்துறை கூறியுள்ளது. இந்த தடுப்பூசி பல ஆராய்ச்சி மையங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் பொது பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் தலைமை இயக்குநர் ஆண்ட்ரே கப்ரின் அளித்த பேட்டியில், 'புற்றுநோய்க்கு எதிராக சொந்தமாக mRNA அடிப்படையிலான அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்கி உள்ளோம். இது மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும்' என்றார். பரிசோதனைகளின்போது, இந்த தடுப்பூசியானது சிறப்பாக செயல்பட்டு புற்றுநோய் வளர்ச்சி மற்றும் புற்றுநோய் பரவுவதை தடுத்ததாக கமலேயா தேசிய ஆராய்ச்சி மைய இயக்குனர் அலெக்சாண்டர் கின்ட்ஸ்பர்க் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து