முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் 71 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மத்திய அரசு பணி நியமன கடிதங்கள் : பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்

ஞாயிற்றுக்கிழமை, 22 டிசம்பர் 2024      இந்தியா
Modi 2024-12-20

Source: provided

புதுடெல்லி : மத்திய அரசு துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள 71,000க்கும் மேற்பட்டோருக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிசம்பர் 23) பணி நியமனக் கடிதங்களை வழங்க உள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரோஜ்கர் மேளாவின் கீழ் பிரதமர் நரேந்திர மோடி 71,000 க்கும் மேற்பட்ட பணி நியமனக் கடிதங்களை டிசம்பர் 23-ம் தேதி காலை 10:30 மணியளவில் வீடியோ கான்பரன்சிங் மூலம் புதிதாகப் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு வழங்கவிருக்கிறார். இந்நிகழ்வில் அவர் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.

ரோஜ்கர் மேளா என்பது வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கும் பிரதமரின் உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கான ஒரு படியாகும். தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கும் சுய அதிகாரமளிப்பதற்கும் இளைஞர்களுக்கு அர்த்தமுள்ள வாய்ப்புகளை வழங்கும். ரோஜ்கர் மேளா நாடு முழுவதும் 45 இடங்களில் நடைபெறும். மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கான ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.

நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பணியாளர்கள், உள்துறை அமைச்சகம், தபால் துறை, உயர் கல்வித் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், நிதிச் சேவைகள் துறை உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள்/துறைகளில் சேருவார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து