எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையில்,வேறு யாராவது குற்றவாளி இருப்பதாக தெரியவந்தால், அது யாராக இருந்தாலும் சரி அவர்கள் மீது தயவு தாட்சணியமின்றி காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும். இந்த வழக்கில் விரைந்து விசாரணை மேற்கொண்டு 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். யார் அந்த சார்? என்ற கேள்விக்கு ஆதாரங்கள் இருந்தால், எதிர்க்கட்சிகள் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் கொடுக்கலாம். அதைவிடுத்து மலிவான செயலில் ஈடுபட வேண்டாம் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாம் நாளான நேற்று (ஜன.8) கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இந்நிலையில், பேரவையில், அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னையில் ஒரு மாணவி மீது நடத்தப்பட்டிருக்கக்கூடிய பாலியல் வன்கொடுமை என்பது மாபெரும் கொடூரம். அதை யாராலும் நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுகுறித்து இந்த அவையில், ஜெகன் மூர்த்தி, வேல்முருகன், ஈஸ்வரன், சதன் திருமலைக்குமார், கே.மாரிமுத்து, நாகை மாலி, சிந்தனைச் செல்வன், எம்.ஆர்.காந்தி, ஜி.கே.மணி, செல்வப்பெருந்தகை, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் பேசியிருக்கிறார்கள்.
இதுகுறித்து உண்மையான அக்கறையோடு பல உறுப்பினர்கள் பேசினர். இதை பயன்படுத்தி இந்த ஆட்சியின் மீது தவறான எண்ணத்தை உருவாக்கும் நோக்கத்தோடும் சில உறுப்பினர்கள் பேசியிருக்கிறார்கள். யாருக்கு என்ன நோக்கம் இருந்தாலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கம் நின்று அவருக்கு சட்டப்படி நியாயத்தைப் பெற்றுத்தர வேண்டும், என்பதைத் தவிர தமிழக அரசுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை.
குற்றம் நடந்தபிறகு, ஒருவேளை குற்றவாளியை உடனடியாக கைது செய்யாமல் விட்டிருந்தால், அல்லது குற்றவாளியை காப்பாற்ற முடிவு செய்திருந்தாலோ, அரசை நீங்கள் குறை சொல்லாலம்.ஆனால் சில மணி நேரத்துக்குள் குற்றவாளியை கைது செய்த பிறகும், குற்றம் தொடர்புடைய ஆதாரங்களை எல்லாம் திரட்டிய பிறகும், அரசை குறை சொல்வது அரசியல் ஆதாயத்துக்கானதே தவிர, உண்மையான அக்கறையோடு செயல்படுவது இல்லை.
24.12.2024 அன்று பிற்பகல், சென்னை மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மறுநாள் காலை இந்த குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளி ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். இது காவல்துறை எடுத்த துரிதமான, சரியான நடவடிக்கை.
ஆனால், எதிர்க்கட்சிகள், முதல் தகவல் அறிக்கை கசிந்தது தொடர்பாக பேசுகின்றனர். அதற்கு காரணம் யார்? மத்திய அரசின் கீழ் செயல்படுகிற தேசிய தகவல் மையம் (என்ஐசி). அது காவல்துறையால் உடனடியாக சுட்டிக்காட்டப்பட்டு, அதன்பின்னர் அந்த தொழில்நுட்பக் கோளாறும் சரி செய்யப்பட்டுள்ளது. அதுதொடர்பாக என்ஐசி விளக்கம் அளித்து கடிதமும் எழுதியுள்ளது.
அதேபோல், பாதுகாப்பு இல்லை, கேமரா இல்லை என்று பொத்தாம் பொதுவாக கூறப்படும் குற்றச்சாட்டிலும் உண்மை இல்லை. சம்பவம் நடந்த இடத்தினை சுற்றியிருக்கக்கூடிய பகுதிகளில் இருந்த கண்காணிப்புக் கேமிரா உதவியோடுதான் குற்றவாளி அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார். முதல் தகவல் அறிக்கை வெளியானதை வைத்துக்கொண்டு ‘யார் அந்த சார்?’ என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றனர். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழுதான் இப்போது இந்த புகாரை விசாரித்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த புலன்விசாரணையில் வேறு யாராவது குற்றவாளி இருப்பதாக தெரியவந்தால், அது யாராக இருந்தாலும் சரி மீண்டும் மீண்டும் சொல்கிறேன் அது யாராக இருந்தாலும் சரி அவர்கள் மீது தயவு தாட்சணியமின்றி காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும். இதை நூறு சதவீதம் உறுதியோடு கூறுகிறேன். அதில் எந்த மாற்றமும் இல்லை.
இந்த வழக்கில் விரைந்து விசாரணை மேற்கொண்டு 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். சிறப்பு நீதிமன்றம் மூலம் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து, குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை கிடைப்பதை உறுதி செய்யும். நான் எதிர்க்கட்சிகளை கேட்க விரும்புவது, யார் அந்த சார்? குற்றம்சாட்டுகிறீர்களே, உண்மையாகவே அதற்கு உங்களிடம் ஆதாரம் இருந்தால், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் கூறுங்கள். அதை யார் தடுக்கப்போகிறார்கள். அதைவிடுத்து ஒரு மாணவி சம்பந்தப்பட்ட சென்சிட்டிவான வழக்கில், வீண் விளம்பரம், குறுகிய அரசியல் லாபத்துக்காக மலிவான செயலில் மீண்டும் மீண்டும் ஈடுபட வேண்டாம்.
இந்த அரசு பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கும். இந்த ஒரு சம்பவத்தை வைத்து பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாதது போன்ற ஒரு சதி திட்டத்தை உருவாக்க பலர் முயற்சிக்கின்றனர். இது மக்கள் மத்தியில் நிச்சயமாக எடுபடாது. காரணம், பெண்கள் பாதுகாப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க இந்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
86 விழுக்காடு பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மற்றும் பொது இடங்களில் பெண்கள் பாதுகாப்பு குறித்து 2 லட்சத்து 39 ஆயிரத்துக்கும் அதிகமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது.” என்று முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-01-2025.
09 Jan 2025 -
நிதி நெருக்கடியால் பொங்கலுக்கு ரூ.ஆயிரம் வழங்க முடியவில்லை: சட்டசபையில் அமைச்சர் விளக்கம்
09 Jan 2025சென்னை, புயல், வெள்ள நிவாரணப் பணிகளை மாநில அரசு நிதி மூலம் மேற்கொள்ளப்பட்டதால் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக, பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1,000 வழங்க முடியவில்லை என
-
பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் துவக்கி வைத்தார்
09 Jan 2025சென்னை, பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் துவக்கி வைத்தார்.
-
சட்டசபையில் யு.ஜி.சி.யின் புதிய விதிகளுக்கு எதிராக முதல்வரின் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்: அ.தி.மு.க. ஆதரவோடு நிறைவேறியதாக சபாநாயகர் அறிவிப்பு
09 Jan 2025சென்னை, யு.ஜி.சி.யின் புதிய விதிகளுக்கு எதிராக சட்டசபையில் முதல்வர் கொண்டு வந்த தனித்தீர்மானம் அ.தி.மு.க.
-
பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க இன்று அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும்: உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவிப்பு
09 Jan 2025சென்னை, பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்காக இன்று அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும் என உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது.
-
திருப்பதி உயிரிழப்பு சம்பவம்: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
09 Jan 2025சென்னை, திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
குற்றங்களை கட்டுப்படுத்த நாம் தொழில்நுட்பங்களை வலுப்படுத்த வேண்டும்: தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் முதல்வர் பேச்சு
09 Jan 2025சென்னை, தொழில்துறை வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது என்று தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், குற்றங்களை கட்டுப்படுத்த நாம் தொழில்நுட்பங்களை வலுப்படுத்
-
மீண்டும் ஒரு சம்பவம்: குமரிக்கு கழிவுகளை ஏற்றி வந்த கேரளாவை சேர்ந்த 9 பேர் கைது
09 Jan 2025கன்னியாகுமரி, மீண்டும் ஒரு சம்பவமாக குமரிக்கு கழிவுகளை ஏற்றி வந்த கேரளாவை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர். வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
-
டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்: வரும் 18-ம் தேதி மனுக்கள் மீது பரிசீலனை
09 Jan 2025புதுடெல்லி, 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி - 5ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும், தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 8-ம் தேதி எண்ணப்படு
-
திருப்பதி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
09 Jan 2025சென்னை, திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
தேர்தல் நேரத்தில் பரிசுத்தொகை: அமைச்சர் பேச்சால் சுவாரஸ்யம்
09 Jan 2025சென்னை, பொங்கல் பரிசுத் தொகை குறித்து பேரவையில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தேர்தல் வந்தால் பொங்கல் பரிசு தருவது பற்றி பார்க்கலாம் என்று நகைச்சுவையாகப் பதி
-
தொலைபேசி மூலம் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் : மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை
09 Jan 2025திருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசியால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்த உத்தவ் தாக்கரே
09 Jan 2025புது டெல்லி, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸை தொடர்ந்து சிவசேனை (உத்தவ் அணி) கட்சியும் ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
-
திருப்பதியில் கூட்டநெரிசலில் உயிரிழந்த தமிழ்நாட்டை சேர்ந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
09 Jan 2025சென்னை, திருப்பதி கோவிலில் கூட்டநெரிசலில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
-
ரூ.4.89 லட்சம் கோடி வரை பொருளாதார இழப்பு: கலிபோர்னியா காட்டுத்தீயை பேரிடராக அறிவித்த பைடன்
09 Jan 2025லாஸ் ஏஞ்சல்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸின் பல பகுதிகளிலும் காட்டுத்தீ விரைவாக பரவி வருகிறது.
-
திருப்பதியில் 6 பேர் உயிரிழந்த சம்பவம்: விசாரணைக்கு பிரதமர் மோடி உத்தரவிட ரோஜா கோரிக்கை
09 Jan 2025திருப்பதி: திருப்பதியில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ரோஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்: வேட்பாளருடன் 5 பேருக்கு மட்டுமே அனுமதி
09 Jan 2025ஈரோடு, காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ.
-
சட்டசபை தி.மு.க.வின் பொதுக்கூட்ட மேடையல்ல: இ.பி.எஸ். கண்டனம்
09 Jan 2025சென்னை, தமிழக சட்டசபை மக்களின் மேடை; தி.மு.க.வின் பொதுக்கூட்ட மேடையல்ல என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
நம்பமுடியாத வேகத்தில் இந்தியாவின் வளர்ச்சி: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
09 Jan 2025புவனேஸ்வர், 21-ம் நூற்றாண்டில் இந்தியா நம்பமுடியாத வேகத்தில் முன்னேறி வருவதாகவும், உலகமே இன்று இந்தியா சொல்வதைக் கேட்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
நாகை மீனவர்கள் 10 பேர் கைது
09 Jan 2025நாகப்பட்டினம்: நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.;
-
டெல்லி சட்டசபை தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டி: அரவிந்த் கெஜ்ரிவால் திட்டவட்டம்
09 Jan 2025புதுடில்லி, புதுடில்லியில் தோல்வியடைவோம் என்ற அச்சத்தில் 2-வது தொகுதியில் போட்டியிடப்போவதாக பா.ஜ.க.
-
இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: பொங்கல் தொகுப்பை வாங்க முடியாமல் ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் ஏமாற்றம்
09 Jan 2025ஈரோடு: இடைத்தேர்தல் தேதி அறிவிப்பால் தேர்தல் நடத்தை விதிகள் அமல் ஆனதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் தொகுப்பை வாங்க முடியாமல் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
-
பெரியார் குறித்த சர்ச்சை கருத்து: சீமானுக்கு எதிராக தி.மு.க புகார்
09 Jan 2025சென்னை: பெரியார் குறித்த சர்ச்சை கருத்துகளை கூறியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக சென்னை காவல் ஆணையரகத்தில் தி.வி.க. மற்றும் தி.மு.க.
-
டங்ஸ்டன் திட்டத்தை கைவிடும் வரை ரேஷன் பொருட்களை வாங்காமல் புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு
09 Jan 2025மதுரை: டங்ஸ்டன் திட்டத்தை கைவிடும் வரை ரேஷன் பொருட்களை வாங்காமல் புறக்கணிப்பதாக கிராமமக்கள் அறிவித்துள்ளனர்.
-
யு.ஜி.சி புதிய விதிகளுக்கு எதிர்ப்பு: தி.மு.க மாணவரணி இன்று ஆர்ப்பாட்டம்
09 Jan 2025சென்னை: யு.ஜி.சி.யின் புதிய விதிகளுக்கு எதிராக மாணவரணி சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.மு.க தலைமை அறிவித்துள்ளது.