முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதிக்கு வரும் பக்தர்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் தேவஸ்தானம் அறிவிப்பு

புதன்கிழமை, 8 ஜனவரி 2025      இந்தியா
Tirupati 2023-09-30

Source: provided

திருப்பதி: இந்தியாவில் எச்.எம்.பி.வி. தொற்று பாதிப்பு எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ள நிலையில் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

சீனாவில் பரவுவதாக கூறப்பட்ட எச்.எம்.பி.வி. தொற்று இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 2 குழந்தைகளும், குஜராத்தில் ஒரு குழந்தையும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. அதே போல் தமிழகத்தில் சென்னை மற்றும் சேலத்தை சேர்ந்த 2 குழந்தைகள் எச்.எம்.பி.வி. தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையில் உள்ளனர்.

இதனிடையே மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் மேலும் 2 குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு இருப்பது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டதால், இந்தியாவில் எச்.எம்.பி.வி. தொற்று பாதிப்பு எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது. இந்த தொற்று குறித்து அச்சப்படத்தேவையில்லை. அதே நேரம் நிலைமையை கவனித்து வருகிறோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் எச்.எம்.பி.வி. தொற்று பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசணம் செய்ய வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி ஆர் நாயுடு அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து