முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொள்ளாச்சி விவகாரம் குறித்து சட்டசபையில் முதல்வர் பேச்சு: அ.தி.மு.க. அமளி- வெளிநடப்பு

புதன்கிழமை, 8 ஜனவரி 2025      தமிழகம்
Stalin 2024-11-26

Source: provided

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த பொள்ளாச்சி சம்பவம் உள்ளிட்ட விவகாரங்களில் 100 சார் கேள்விகளை என்னால் கேட்க முடியும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய பதிலுரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

அண்ணா பல்கலை. மாணவி விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நேற்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதன் மீது உறுப்பினர்கள் பேசினார்கள். உறுப்பினர்களின் கேள்விக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார். அவையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், பொள்ளாச்சி வழக்கில் அதிமுக என்ன செய்தது என்று கேள்வி எழுப்பினார். மேலும், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிமுக பிரமுகர்களுக்கு தொடர்பிருப்பது தெரிய வந்தது. முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யவே 12 நாள்கள் ஆனது.

பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுகவை நோக்கி 100 சார் கேள்விகளை கேட்க முடியும் என்றார். அதாவது யார் அந்த சார்? என்ற பேட்ஜை அதிமுக உறுப்பினர்கள் அணிந்து வந்திருப்பதைக் குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு உரையாற்றினார். யார் அந்த சார் என்பதை முடிந்தால் மத்திய அரசு உதவியுடன் கண்டுபிடியுங்கள் என்றும் முதல்வர் பேசினார்.

தமிழக அரசு மீது குற்றச்சாட்டுகளை வைக்கும்போது பொறுப்புகளை உணர்ந்து முன்வைக்க வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தினார். பொள்ளாச்சி விவகாரம் குறித்து முதல்வர் பேசியதற்கு அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அவர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து