முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் ஆட்சிக்கு வந்தால் ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடு காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதி

புதன்கிழமை, 8 ஜனவரி 2025      இந்தியா
Congress 2023 01 25

Source: provided

டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் ரூ. 25 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வருகிற பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது. இந்த நிலையில், ஜீவன் ரக்ஷா யோஜனா என்ற பெயரில் ரூ. 25 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.இதுகுறித்து ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் பேசியதாவது:-

ஜீவன் ரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ், ரூ.25 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீடு கிடைக்கும். ராஜஸ்தானில் இதேபோன்ற திட்டத்தை நாங்கள் தொடங்கினோம், இதன் கீழ் மக்களுக்கு ரூ.25 லட்சம் வரை இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது. ராஜஸ்தானில் சுகாதார உரிமை சட்டத்தை நாங்கள் இயற்றினோம். மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டன. மேலும் இந்த சட்டம் அனைத்து மருத்துவமனைகளிலும் செயல்படுத்தப்பட்டது.

ராஜஸ்தானில் இது ஒரு புரட்சிகரமான திட்டமாக அமைந்தது. ஜீவன் ரக்ஷா யோஜனா தில்லிக்கு ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டமாக இருக்கும் எனத் தெரிவித்தார். முன்னதாக, பியாரி திதி யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய காங்கிரஸ், ஆட்சிக்கு வந்தால் மாதம் ரூ. 2,500 பெண்களுக்கு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து