முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்கலைக்கழக புதிய விதிகளை திரும்ப பெற வேண்டும் ஓ.பி.எஸ். வலியுறுத்தல்

புதன்கிழமை, 8 ஜனவரி 2025      தமிழகம்
OPS 2023-10-25

Source: provided

சென்னை: பல்கலைக்கழக புதிய விதிகளை திரும்ப பெற வேண்டும் என ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தினார்.

மாநில சுயாட்சிக்கு எதிரான அனைத்துத் திருத்தங்களையும் திரும்ப பெற வேண்டும் என ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு உலக அரங்கில் தனிச் சிறப்புடன் விளங்க வேண்டும் என்றால், உயர் கல்வி வளர்ச்சி பெறுதல் வேண்டும். ஒரு நாடு உயர் நிலையடைய உயர் கல்வி மிகவும் அவசியம் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. இந்த உயர் கல்வியை அளிக்கக்கூடிய பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் இல்லாத அவல நிலை தமிழ்நாட்டில் நீடிக்கிறது. 

இந்த நிலையில், உயர் கல்விக்கான வரைவு கொள்கையை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டு, அதில் துணை வேந்தர் நியமனத்தில் பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இது நாள் வரை, துணை வேந்தர் நியமனத்திற்கான தேடுதல் குழுவில், மாநில அரசின் பிரதிநிதி, வேந்தரின் பிரதிநிதி மற்றும் பல்கலைக்கழக செனட் / சிண்டிகேட் பிரதிநிதி என மூவர் இடம் பெற்று வந்தனர். இந்த நிலையில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதியையும் சேர்க்க வேண்டுமென்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. இதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதன் காரணமாக துணை வேந்தர் நியமனம் என்பது காலதாமதமாகிக் கொண்டே வந்தது. 

இந்த நிலையில், பல்கலைக்கழக மானியக் குழுவால் வெளியிடப்பட்டுள்ள வரைவுத் திருத்தங்களில், துணை வேந்தர் நியமனத்தில் கவர்னருக்கு அதிக அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, தேடுதல் குழுவின் கவர்னருக்கு பிரதிநிதி, பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதி மற்றும் பல்கலைக்கழக உயர் அமைப்பின் பிரதிநிதி என 3 பேர் மட்டுமே துணை வேந்தர் நியமனத் தேடுதல் குழுவில் இருக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வரைவுக் கொள்கையில் மாநில அரசின் பிரதிநிதி நீக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் உரிமையை பறிக்கும் செயலாகும். இது மட்டுமல்லாமல், பேராசிரியர்கள் அல்லாத, தொழில் துறை, பொது நிர்வாகம் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பத்தாண்டுகள் அனுபவம் பெற்றவர்களும் துணை வேந்தராக வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாநில அரசின் பிரதிநிதியை துணை வேந்தர் தேடுதல் குழுவிலிருந்து நீக்கியது உட்பட மாநில சுயாட்சிக்கு எதிரான அனைத்துத் திருத்தங்களையும் திரும்ப பெற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து