முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எச்.எம்.பி.வி. தொற்று குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் சட்டசபையில் அமைச்சர் விளக்கம்

புதன்கிழமை, 8 ஜனவரி 2025      தமிழகம்
Ma Subramani-2023-11-09

Source: provided

சென்னை: எச்.எம்.பி.வி. தொற்று குறித்து அச்சப்பட தேவை இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

நடப்பாண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 3-வது நாளான நேற்று எச்.எம்.பி.வி. தொற்று குறித்து சட்டசபையில் விளக்கம் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், எச்.எம்.பி.வி. வைரசுக்கு அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.  மேலும் அவர் கூறியதாவது:-

சீனாவில் பரவிவரும் எச்.எம்.பி.வி. வைரஸ் 50 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்டது. இந்த வைரசால் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட இருவர் நலமுடன் உள்ளனர். எச்.எம்.பி.வி. தொற்று குறித்து அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. காய்ச்சல், சளி பாதிப்புள்ளோர் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது நல்லது. எச்.எம்.பி.வி. வைரஸ் சாதாரணமான ஒன்றுதான்; வீரியத் தன்மை உள்ள வைரஸ் இல்லை. இதற்கென பிரத்யேக மருந்துகளும் இல்லை. பிரத்யேக சிகிச்சையும் இல்லை. 4 அல்லது 5 நாட்களில் அதுவாகவே சரியாகிவிடுகிறது. பெரிய அளவில் பயப்படத் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து