முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புகார் அளிக்க வருவோர் அஞ்சும் நிலையை அரசு ஏற்படுத்திவிட்டது முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

புதன்கிழமை, 8 ஜனவரி 2025      தமிழகம்
RBUdhayakumar 2024-12-22

Source: provided

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் எப்.ஐ.ஆரை வெளியிட்டு, புகார் அளிக்க வருவோர் அஞ்சும் நிலையை அரசு ஏற்படுத்திவிட்டது என்றும் அதிமுக எம்.எல்.ஏ. ஆர்.பி. உதயகுமார் குற்றம்சாட்டியிருக்கிறார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்து கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் மீது பேரவை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது அதிமுக எம்எல்ஏ ஆர்.பி. உதயகுமார் பேசுகையில், சென்னை காவல் ஆணையர் அவசர அவசரமாக யாரைக் காப்பாற்ற முயற்சி செய்தார். அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு கொடூரம் நேர்ந்துள்ளது. கைதான ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் என செய்திகள் வந்துள்ளன. பெண்கள் பாதுகாப்பில் திமுக அலட்சியமாக செயல்படுகிறது. முதல்வர் ஏன் தற்போது வரை அண்ணா பல்கலை விவகாரத்தில் விளக்கம் தரவில்லை.

கைதான ஞானசேகரனின் செல்போனில், அவர் யாரிடம் பேசினாரோ, அந்த தொலைபேசி எண்ணை வைத்தே எளிதாக கண்டுபிடித்துவிடலாமே. அதனை ஏன் செய்யவில்லை. சார் யார் என்பதை இந்த அரசு வெளியிட வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவியின் விவரங்களை வெளியே கசியவிட்டது எப்படி? என்றும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். மேலும், முதல்தகவல் அறிக்கையை வெளியிட்டு, புகார் அளிக்க வருவோருக்கு ஒரு அச்ச உணர்வை இந்த அரசு ஏற்படுத்திவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், போராடியவர்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது இந்த அரசு. போராடிய திமுகவினர் கைது செய்யப்படவில்லை. ஆனால் அதிமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராடிய திமுகவினர் மீது வழக்குப் போடப்பட்டிருக்கலாம். ஆனால் கைது செய்யப்படவில்லை என்று, போராட்டம் நடத்திய திமுகவினர் மீதும் வழக்குப் போடப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்ததற்கு, ஆர்.பி. உதயகுமார் கருத்துக் கூறியிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து