எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நியூயார்க் : ஆபாச பட நடிகை வழக்கில் தீர்ப்பை ஒத்திவைக்க கோரிய டொனால்டு டிரம்பின் மனுவை தள்ளுபடி செய்து மன்ஹாட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப். இந்நிலையில், கடந்த நவம்பர் 5-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்தது. இதில், பெரும்பான்மையான இடங்களை முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் சார்ந்த குடியரசு கட்சி கைப்பற்றியது. டிரம்ப் வெற்றி பெற்று, வருகிற 20-ந்தேதி அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்க இருக்கிறார். டிரம்ப், 2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை அமெரிக்க ஜனாதிபதியாக பணியாற்றினார்.
இதனிடையே, டிரம்ப் தன்னுடன் பாலியல் உறவு கொண்டதாக அமெரிக்காவை சேர்ந்த ஆபாச பட நடிகையான ஸ்டோமி டேனியல்ஸ் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். 2006-ம் ஆண்டு ஜூலை மாதம் டொனால்டு டிரம்ப் ஓட்டலில் வைத்து தன்னுடன் பாலியல் உறவு கொண்டதாக ஸ்டோமி டேனியல்ஸ் தெரிவித்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டை டிரம்ப் மறுத்துள்ளார்.
அதேவேளை, 2016-ம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு, தன்னுடனான பாலியல் உறவு விவகாரம் பற்றி வெளியே கூறிவிடக்கூடாது என்பதற்காக டிரம்ப் தனக்கு பணம் கொடுத்ததாகவும் ஸ்டோமி டேனியல்ஸ் தெரிவித்தார்.
தேர்தல் பிரசார நிதியாக ஒதுக்கப்பட்ட பணத்தில் இருந்து டொனால்டு டிரம்ப் போலியான வணிக பதிவுகளை உருவாக்கி, பின்னர் தனது முன்னாள் வழக்கறிஞரான மைக்கேல் கோஹன் மூலம் ஸ்டோமி டேனியல்சுக்கு அந்த பணத்தில் இருந்து 1 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர்களை டிரம்ப் கொடுத்துள்ளார்.
இந்த விவகாரம் ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. டொனால்டு டிரம்பிற்கு எதிராக பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இதில், பணமோசடி உள்பட 34 பிரிவுகளில் டொனால்டு டிரம்ப் குற்றவாளி என மன்ஹாட்டன் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் இந்த வாரம் தண்டனை அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு அறிவிப்பை தள்ளி வைக்கும்படி கோரி, டிரம்ப் சார்பில் நியூயார்க் கோர்ட்டு ஒன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும், டிரம்ப்பின் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. வருகிற வெள்ளி கிழமை தண்டனை விவரம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. டிரம்ப்பின் வழக்கறிஞர்களின் வாதங்களை இணை நீதிபதி எல்லன் கெஸ்மர் நிராகரித்து உள்ளார்.
ஜனவரி 20-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில், இந்த தீர்ப்பு பரபரப்பாக பார்க்கப்படுகிறது. எனினும், கெஸ்மரின் இந்த தீர்ப்புக்கு எதிராக நீதிமன்ற அமர்வு மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் டிரம்ப் மேல்முறையீடு செய்ய முடியும். இந்த சூழலில், வெள்ளி கிழமை தண்டனை விவரம் தீர்ப்புக்காக நேரிலோ அல்லது காணொலி காட்சி வழியாகவோ, இவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து வழக்கில் டிரம்ப் ஆஜராகலாம் என நீதிபதி ஜுவான் மெர்சன் கூறியுள்ளார். ஆனால், நீதிபதி மெர்சனை டிரம்ப் கடுமையாக சாடினார். மெர்சன் ஒரு நேர்மையற்ற நீதிபதி என பத்திரிகையாளர் சந்திப்பின்போது, டிரம்ப் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-01-2025.
09 Jan 2025 -
பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் துவக்கி வைத்தார்
09 Jan 2025சென்னை, பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் துவக்கி வைத்தார்.
-
நிதி நெருக்கடியால் பொங்கலுக்கு ரூ.ஆயிரம் வழங்க முடியவில்லை: சட்டசபையில் அமைச்சர் விளக்கம்
09 Jan 2025சென்னை, புயல், வெள்ள நிவாரணப் பணிகளை மாநில அரசு நிதி மூலம் மேற்கொள்ளப்பட்டதால் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக, பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1,000 வழங்க முடியவில்லை என
-
சட்டசபையில் யு.ஜி.சி.யின் புதிய விதிகளுக்கு எதிராக முதல்வரின் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்: அ.தி.மு.க. ஆதரவோடு நிறைவேறியதாக சபாநாயகர் அறிவிப்பு
09 Jan 2025சென்னை, யு.ஜி.சி.யின் புதிய விதிகளுக்கு எதிராக சட்டசபையில் முதல்வர் கொண்டு வந்த தனித்தீர்மானம் அ.தி.மு.க.
-
பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க இன்று அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும்: உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவிப்பு
09 Jan 2025சென்னை, பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்காக இன்று அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும் என உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது.
-
திருப்பதி உயிரிழப்பு சம்பவம்: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
09 Jan 2025சென்னை, திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
குற்றங்களை கட்டுப்படுத்த நாம் தொழில்நுட்பங்களை வலுப்படுத்த வேண்டும்: தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் முதல்வர் பேச்சு
09 Jan 2025சென்னை, தொழில்துறை வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது என்று தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், குற்றங்களை கட்டுப்படுத்த நாம் தொழில்நுட்பங்களை வலுப்படுத்
-
மீண்டும் ஒரு சம்பவம்: குமரிக்கு கழிவுகளை ஏற்றி வந்த கேரளாவை சேர்ந்த 9 பேர் கைது
09 Jan 2025கன்னியாகுமரி, மீண்டும் ஒரு சம்பவமாக குமரிக்கு கழிவுகளை ஏற்றி வந்த கேரளாவை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர். வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
-
டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்: வரும் 18-ம் தேதி மனுக்கள் மீது பரிசீலனை
09 Jan 2025புதுடெல்லி, 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி - 5ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும், தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 8-ம் தேதி எண்ணப்படு
-
திருப்பதி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
09 Jan 2025சென்னை, திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
தேர்தல் நேரத்தில் பரிசுத்தொகை: அமைச்சர் பேச்சால் சுவாரஸ்யம்
09 Jan 2025சென்னை, பொங்கல் பரிசுத் தொகை குறித்து பேரவையில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தேர்தல் வந்தால் பொங்கல் பரிசு தருவது பற்றி பார்க்கலாம் என்று நகைச்சுவையாகப் பதி
-
தொலைபேசி மூலம் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் : மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை
09 Jan 2025திருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசியால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்த உத்தவ் தாக்கரே
09 Jan 2025புது டெல்லி, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸை தொடர்ந்து சிவசேனை (உத்தவ் அணி) கட்சியும் ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
-
திருப்பதியில் கூட்டநெரிசலில் உயிரிழந்த தமிழ்நாட்டை சேர்ந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
09 Jan 2025சென்னை, திருப்பதி கோவிலில் கூட்டநெரிசலில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
-
திருப்பதியில் 6 பேர் உயிரிழந்த சம்பவம்: விசாரணைக்கு பிரதமர் மோடி உத்தரவிட ரோஜா கோரிக்கை
09 Jan 2025திருப்பதி: திருப்பதியில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ரோஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
-
ரூ.4.89 லட்சம் கோடி வரை பொருளாதார இழப்பு: கலிபோர்னியா காட்டுத்தீயை பேரிடராக அறிவித்த பைடன்
09 Jan 2025லாஸ் ஏஞ்சல்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸின் பல பகுதிகளிலும் காட்டுத்தீ விரைவாக பரவி வருகிறது.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்: வேட்பாளருடன் 5 பேருக்கு மட்டுமே அனுமதி
09 Jan 2025ஈரோடு, காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ.
-
சட்டசபை தி.மு.க.வின் பொதுக்கூட்ட மேடையல்ல: இ.பி.எஸ். கண்டனம்
09 Jan 2025சென்னை, தமிழக சட்டசபை மக்களின் மேடை; தி.மு.க.வின் பொதுக்கூட்ட மேடையல்ல என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: பொங்கல் தொகுப்பை வாங்க முடியாமல் ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் ஏமாற்றம்
09 Jan 2025ஈரோடு: இடைத்தேர்தல் தேதி அறிவிப்பால் தேர்தல் நடத்தை விதிகள் அமல் ஆனதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் தொகுப்பை வாங்க முடியாமல் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
-
நம்பமுடியாத வேகத்தில் இந்தியாவின் வளர்ச்சி: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
09 Jan 2025புவனேஸ்வர், 21-ம் நூற்றாண்டில் இந்தியா நம்பமுடியாத வேகத்தில் முன்னேறி வருவதாகவும், உலகமே இன்று இந்தியா சொல்வதைக் கேட்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
நாகை மீனவர்கள் 10 பேர் கைது
09 Jan 2025நாகப்பட்டினம்: நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.;
-
டெல்லி சட்டசபை தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டி: அரவிந்த் கெஜ்ரிவால் திட்டவட்டம்
09 Jan 2025புதுடில்லி, புதுடில்லியில் தோல்வியடைவோம் என்ற அச்சத்தில் 2-வது தொகுதியில் போட்டியிடப்போவதாக பா.ஜ.க.
-
பெரியார் குறித்த சர்ச்சை கருத்து: சீமானுக்கு எதிராக தி.மு.க புகார்
09 Jan 2025சென்னை: பெரியார் குறித்த சர்ச்சை கருத்துகளை கூறியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக சென்னை காவல் ஆணையரகத்தில் தி.வி.க. மற்றும் தி.மு.க.
-
டங்ஸ்டன் திட்டத்தை கைவிடும் வரை ரேஷன் பொருட்களை வாங்காமல் புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு
09 Jan 2025மதுரை: டங்ஸ்டன் திட்டத்தை கைவிடும் வரை ரேஷன் பொருட்களை வாங்காமல் புறக்கணிப்பதாக கிராமமக்கள் அறிவித்துள்ளனர்.
-
யு.ஜி.சி புதிய விதிகளுக்கு எதிர்ப்பு: தி.மு.க மாணவரணி இன்று ஆர்ப்பாட்டம்
09 Jan 2025சென்னை: யு.ஜி.சி.யின் புதிய விதிகளுக்கு எதிராக மாணவரணி சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.மு.க தலைமை அறிவித்துள்ளது.