முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் மறைவு: டிரம்ப் பதவியேற்கும் வரை அரை கம்பத்தில் பறக்கும் தேசிய கொடி

புதன்கிழமை, 8 ஜனவரி 2025      உலகம்
America 2024-04-22

Source: provided

நியூயார்க் : ஜிம்மி கார்டர்  மறைவு காரணமாக அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் டொனால்ட் டிரம்ப், ஜனவரி 20ஆம் தேதி அதிபராகப் பதவியேற்கும்போது, அந்நாட்டு தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறந்துகொண்டிருக்கும்.

முன்னாள் அமெரிக்க அதிபர், மறைந்த ஜிம்மி கார்ட்டர் தன்னுடைய 100வது வயதில் கடந்த ஞாயிறன்று காலமானார். அவரது மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் அமெரிக்க தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று அந்நாட்டின் தற்போதைய அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டிருந்தார்.

அமெரிக்க அதிபராக பதவியேற்கும் வரை டொனால்ட் டிரம்ப் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்பதால், அமெரிக்க தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கும் நடவடிக்கையில் அவரால் எதையும் செய்ய இயலாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க அதிபராக இருந்து மறைந்த ஜிம்மி கார்ட்டருக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அவரது மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையிலும் நாட்டின் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படுகிறது.

வழக்கமாக, அமெரிக்க அதிபரோ அல்லது முன்னாள் அதிபரோ மரணமடையும் போது, அரசு அலுவலகக் கட்டடங்கள், அதன் வளாகங்கள், அமெரிக்க தூதரகங்கள், பாதுகாப்புப் படை அலுவலகங்களில் தேசியக் கொடி 30 நாள்களுக்கு அரைக்கம்பத்தில் தான் பறக்கவிடப்படும்.

அதன்படி, தற்போது அமெரிக்காவில் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருக்கும் தேசியக் கொடி ஜனவரி 28ஆம் தேதி வரை அவ்வாறே நீடிக்கும்.

அப்படியென்றால், டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்கும் ஜனவரி 20ஆம் தேதியும், அவரது ஆட்சித் தொடங்கிய முதல் வாரம் முழுவதும் அமெரிக்க தேசியக் கொடி அரைக்கம்பத்தில்தான் பறந்துகொண்டிருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக தேசியக் கொடி பறப்பது தொடர்பான உத்தரவுகளை அமெரிக்க அதிபர், ஆளுநர், மாகாண மேயர்கள் பிறப்பிக்கலாம். ஒருவேளை, டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதும், அமெரிக்க தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடுவதை மாற்றும்படி உத்தரவு பிறப்பிக்கலாம். அதற்கு வழிவகை உள்ளது.

இதற்கு முன்பு, கடந்த 1973ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், அமெரிக்க அதிபராக இருந்த ரிச்சர்ட் நிக்சான், முன்னாள் அதிபர் லைடன் ஜான்சன் மறைவுக்கு, தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு உத்தரவிட்டிருந்தார். இதற்கிடையே, அமெரிக்க போர் கைதிகள் வியட்நாமிலிருந்து விடுதலை செய்யப்பட்ட நாளன்று மட்டும் தேசியக் கொடி முழுமையாக ஏற்றப்பட்டு கம்பத்தில் பறக்கவிடப்பட்டு, அடுத்த நாளிலிருந்து மீண்டும் எட்டு நாள்களுக்கு தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து