முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகாவில் நிகழ்ந்த சோகம்: டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி 3 பேர் பலி

புதன்கிழமை, 8 ஜனவரி 2025      இந்தியா
Accident-1

Source: provided

பெங்களூரு : கர்நாடகாவில்  டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகினர். 

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் ஒபலபுரா கிராமம் அருகே நேற்று முன்தினம் காலை ஒரே மோட்டார் சைக்கிளில் பெண் உள்பட 3 பேர் சென்று கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு மூடுபனி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 3 பேர் சென்ற மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற டிராக்டரின் டிரெய்லரில் மோதியது. இதில்  3 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.  இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கோரா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பலியானவர்கள் துமகூரு மாவட்டம் மதுகிரி தாலுகா குடேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஷாகீர் உசேன் (வயது 18), மம்தாஜ் (38), முகம்மது ஆசீப் (12) ஆகியோர் என்பதும், தாய், மகன்கள் என்பதும் தெரியவந்தது. ஷாகீர் உசேன் பி.யூ.சி. முதலாம் ஆண்டும், முகம்மது ஆசீப் 6-ம் வகுப்பும் படித்து வந்துள்ளனர்.

பலியான 3 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக துமகூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் போலீசார் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மோட்டார் சைக்கிளில் விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து