முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரபிரதேசத்தில் நடந்த வினோதம்: பிச்சைகாரருடன் ஓடியதாக மனைவி மீது போலீசில் புகார்

புதன்கிழமை, 8 ஜனவரி 2025      இந்தியா
Jail 2024-10-04

Source: provided

லக்னோ : உத்தர பிரதேசத்தில் பிச்சை காரருடன் தனது மனைவி ஓடி விட்டதாக 6 குழந்தைகளின் தந்தை போலீசில் புகார்  அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்தில் லம்கான் கிராமத்தில் வசித்து வரும் நபர் ராஜு. இவருடைய மனைவி ராஜேஷ்வரி (வயது 36). இந்த தம்பதிக்கு 6 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மனைவிக்கு எதிராக ராஜு போலீசில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அதில், அந்த பகுதியில் வசித்து வரும் நான்ஹி பண்டிட் என்ற பிச்சைக்காரருடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட அவருடைய மனைவி, வீட்டை விட்டு வெளியேறி ஓடி விட்டார் என தெரிவித்து இருக்கிறார்.

கிராமத்தில் உள்ளவர்களிடம் பிச்சை எடுத்து 2 வேளை உணவை வாங்கி நான்ஹி சாப்பிட்டு வந்துள்ளார். இதேபோன்று 36 வயதுடைய அந்த பெண்ணின் வீட்டுக்கும் பிச்சை எடுக்க சென்றுள்ளார். அந்த பெண் உணவு அல்லது அரிசி போன்றவற்றை கொடுத்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் நான்ஹி மீது கணவர் புகார் அளித்துள்ளார். அதே பகுதியில் சாண்டி என்ற இடத்தில் நான்ஹி தங்கியிருக்கிறார்.

அவர்கள் இருவரும் பல மணிநேரம் ஒன்றாக பேசியபடி இருந்துள்ளனர். இதனை அக்கம்பக்கத்தினர் கவனித்துள்ளனர். 

இந்நிலையில் 2 நாட்களுக்கு முன், சாப்பிட ஏதேனும் வாங்கி வருகிறேன் என கூறி, சாண்டியில் உள்ள மார்க்கெட்டுக்கு சென்று வருகிறேன் என கூறி விட்டு சென்ற அந்த பெண் பின்னர் வீடு திரும்பவில்லை. இதன்பின்பே, நான்ஹியுடன் மனைவி தப்பியோடிய விவரம் தெரிய வந்துள்ளது என புகாரில் கணவர் கூறியுள்ளார்.

வீட்டில் இருந்து செல்லும்போது, பணம் மற்றும் நகை உள்ளிட்டவற்றை அந்த பெண் எடுத்து சென்று விட்டார் எனவும் புகாரில் தெரிவித்து இருக்கிறார். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து பிச்சைக்காரரை தேடி வந்தனர். இந்த நிலையில், அந்த பெண்ணை போலீசார் மீட்டனர். அந்த பெண் போலீசாரிடம் கூறும்போது, அவருடைய கணவர் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததுடன், அடித்து காயப்படுத்தி வந்துள்ளார். இதனால், உறவுக்காரர்களின் வீட்டுக்கு சென்று விட்டேன் என கூறியுள்ளார்.

அந்த பெண் யாருடனோ ஓடி விட்டார் என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை. அவை அடிப்படையற்றவை என போலீசார் தெரிவித்தனர். இதுபற்றி தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்றும் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து