முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிவேகமாக 10 போட்டிகளில் வென்ற கேப்டன்: புதிய சாதனையை நோக்கி தென்னாப்பிரிக்க கேப்டன்

புதன்கிழமை, 8 ஜனவரி 2025      விளையாட்டு
South-Africa 2024-05-15

Source: provided

கேப்டவுன் : தென்னாப்பிரிக்க கேப்டன் தெம்பா பவுமா 74 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இறுதிப்போட்டிக்கு... 

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதல்முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்-ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது. இந்திய அணி தகுதிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்ததால், ஆஸ்திரேலியா நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இதனால், ஜூன் மாதம் 11 ஆம் தேதி இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கும் இறுதிப்போட்டியில் இவ்விரு அணிகளும் விளையாடவிருக்கின்றன.

தோல்விகள் இன்றி... 

தெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி கடைசியாக விளையாடிய 9 போட்டிகளில் 8-ல் வென்றும் ஒரு போட்டி சமனிலும் முடிந்ததால் தோல்வியின்றி வீறுநடை போட்டுக்கொண்டிருக்கிறது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக சமனில் முடிந்த போட்டி மழையால் முடிவுக்கு வந்தது. 

சாதனை சமன்...

1921 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியின் கேப்டன் பெர்சி சான்மேன் தொடர்ச்சியாக 9 போட்டிகளில் வென்றதே இதுவரை சாதனையாக தொடர்கிறது. இந்தநிலையில், அவருக்கு அடுத்தபடியாக 1921 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் வார்விக் ஆர்ஸ்ட்ராங் மற்றும் லிண்ட்சே ஹாசெட்(1951) ஆகியோர் 9 போட்டிகளில் 8-ல் வெற்றி பெற்றிருந்த சாதனையை பவுமா சமன் செய்துள்ளார். ஒருவேளை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றிபெற்று அதன்பின்னர், அடுத்த போட்டியிலும் வெற்றிபெறும் பட்சத்தில் அதிவேகமாக 10 போட்டிகளில் வென்ற கேப்டன் என்ற புதிய வரலாற்றையும் 74 ஆண்டுகளுக்குப் பின்னர் படைக்க முடியும். பவுமாவைத் தொடர்ந்து பிரையன் க்ளோஸ் (இங்கிலாந்து), சார்லஸ் ஃப்ரை (இங்கிலாந்து), அஜிங்க்யா ரஹானே (இந்தியா) ஆகியோரும் தோல்வியைச் சந்திக்காத கேப்டன்களாக உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து