முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று பேசி எதிர்க்கட்சிகள் மலிவான அரசியல் செய்யக்கூடாது : சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

புதன்கிழமை, 8 ஜனவரி 2025      தமிழகம்
CM-1 2023-11-18

Source: provided

சென்னை : தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று பேசி எதிர்க்கட்சிகள் மலிவான அரசியல் செய்யக்கூடாது என்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாம் நாளான நேற்று (ஜன.8) கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இந்நிலையில், பேரவையில், அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பெண்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பில்லை என்று பேசி மலிவான அரசியல் செய்யக்கூடாது. அண்ணாநகர் சிறுமி வன்கொடுமை வழக்கில் அ.தி.மு.க. நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். பொள்ளாச்சி சம்பவம் முழுவதுமே அ.தி.மு.க. பிரமுகர்களால் நடத்தப்பட்டது. அது தொடர்பாக அ.தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி சம்பவம் சி.பி.ஐ.யிடம் போனபிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சி சம்பவமே சாட்சி.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யவே 12 நாட்கள் ஆனது. அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் புகார் அளித்த உடனே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க. அரசின் மீது களங்கம் ஏற்படுத்த சிலர் எடுக்கும் முயற்சிகள் ஒருபோதும் எடுபடாது. உயர்கல்வி கற்க வரும் மாணவிகளை அச்சுறுத்தி அவர்களின் கல்வியை கெடுக்க வேண்டாம்.

பெண்களுக்கு எதிரான ஆட்சி நடத்திய சார்கள் பேட்ஜ் அணிந்து வருகின்றனர். 100-க்கும் மேற்பட்ட சார்கள் குறித்த கேள்வியை அ.தி.மு.க.வை பார்த்து என்னால் கேட்க முடியும். பா.ஜ.க.வின் கதையை சொல்லி பேரவையின் மாண்பை குலைக்க விரும்பவில்லை. எந்த பின்னணியைச் சேர்ந்தவராக இருந்தாலும் குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க. ஆட்சி பெண்களுக்கான ஆட்சி. யார் அந்த சார்? என்பதற்கு ஆதாரம் இருந்தால், அதை சிறப்பு புலனாய்வு குழுவிடம் வழங்குங்கள். பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்.

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் கைதான ஞானசேகரன் தி.மு.க.வைச் சேர்ந்தவர் அல்ல; தி.மு.க. ஆதரவாளர் மட்டுமே. ஞானசேகரன் தி.மு.க. ஆதரவாளர் என்பதை மறுக்கவில்லை. தி.மு.க.வைச் சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை எடுத்திருப்போம். அமைச்சருடன் புகைப்படம் எடுத்திருக்கலாம்; ஆனால் அவர் தி.மு.க.வில் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து