முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களின் பிரச்னைகளை பற்றி பேச வேண்டும்: பா.ஜ.க. வேட்பாளர் பேச்சு; பிரியங்கா கடும் கண்டனம்

புதன்கிழமை, 8 ஜனவரி 2025      இந்தியா
Priyanka 2024-10-23

Source: provided

புதுடெல்லி : மக்களின் உண்மையான பிரச்னைகளைப் பற்றி பேச வேண்டும் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ரமேஷ் பிதுரியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் பிப். 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆம் ஆத்மி வேட்பாளரும் முதல்வருமான அதிஷியை எதிர்த்து தில்லியின் கல்காஜி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் ரமேஷ் பிதுரி போட்டியிடுகிறார். பிரசாரத்தின்போது பேசிய ரமேஷ் பிதுரி, பீகார் மாநில சாலைகளை ஹேமமாலினியின் கன்னங்களைப் போல் ஆக்குவேன் என்று லாலு உறுதியளித்தார். ஆனால் அவரால் அதைச் செய்ய முடியவில்லை. டெல்லியில் பா.ஜ.க. ஆட்சி அமைத்தால், கல்காஜி தொகுதியில் உள்ள அனைத்து சாலைகளையும் பிரியங்கா காந்தியின் கன்னங்களைப் போல் ஆக்குவேன் எனப் பேசியிருந்தார். அவரின் இத்தகையப் பேச்சுக்கு பல்வேறு தரப்புகளில் எதிர்ப்புகள் எழுந்தன.

டெல்லியில் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த பிரியங்கா காந்தி, ''இது முட்டாள்தனமானப் பேச்சு. அவர் தன்னுடைய கன்னங்களைப் பற்றி பேசாமல், மற்றவர் கன்னங்களைப் பற்றி பேசுகிறார். இது அரசியல் சூழலில் தேவையற்றப் பேச்சு. தேர்தல் நேரத்தில் மக்களின் உண்மையான பிரச்னைகளைப் பற்றி பேச வேண்டும். டெல்லி மக்களின் நலன் கருதிப் பேச வேண்டும்'' எனக் குறிப்பிட்டார். பா.ஜ.க. வேட்பாளர் பிதுரி, பிரியங்கா காந்தியை மட்டுமின்றி, தில்லி முதல்வர் அதிஷி குறித்தும் அவரின் குடும்பத்தைக் குறித்தும் அவதூறாகப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து