முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குகேஷ், மனு பாக்கர் உள்ளிட்ட 4 பேருக்கு கேல் ரத்னா விருது: ஜனாதிபதி முர்மு வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 17 ஜனவரி 2025      விளையாட்டு
Murmu 2023-11-19

Source: provided

புதுடில்லி : உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு இளம் வீரர் குகேஷ், துப்பாக்கி சூடும் வீராங்கனை மனு பாக்கர் உள்ளிட்ட 4 பேருக்கு கேல் ரத்னா விருதை நேற்று ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.

உயரிய விருது...

ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில், சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியில் பங்கேற்று சாம்பியன் பட்டம் வென்ற 18 வயதே ஆன இளம் வீரர், தமிழகத்தைச் சேர்ந்த டி.குகேஷுக்கு, இந்திய விளையாட்டுத் துறையில் உயரியதாக இருக்கும் ‘தியான்சந்த் கேல் ரத்னா விருதினை ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கினார். தமிழக வீரர் குகேஷுடன், தமிழக பாரா பாட்மின்டன் வீராங்கனைகள் துளசிமதி முருகேசன், நித்யஸ்ரீ சுமதி சிவன், மனிஷா ராமதாஸ் ஆகியோரும் அர்ஜுனா விருது பெற்றுள்ளனர்.

மனு பாக்கர் ...

விளையாட்டுத் துறையில் இந்தியாவை உலக அளவில் பெருமைப்படுத்தியவர்கள், துறை சார்ந்து சிறப்பாகச் செயல்படுபவர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில் விருதுகள் வழங்கப்படுகின்றன. மேலும், ஹாக்கி ஆண்கள் அணித் தலைவர் ஹர்மன்ப்ரீத் கௌர், பாரா தடகள வீரர் பிரவீன் குமார், துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் ஆகியோரும் நேற்று கேல் ரத்னா விருதினை குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.  

பாராலிம்பிக் போட்டியில் ...

கடந்த ஆண்டு நடைபெற்ற பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் துளசிமதி வெள்ளிப் பதக்கம் வெல்ல, நித்யஸ்ரீ, மனிஷா ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தனர். இவர்கள் மூவரும் உலக மற்றும் ஆசிய அளவிலான பாரா போட்டிகளிலும் பதக்கம் வென்று சாதனை படைத்தவர்களாவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து