முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காசோலையில் கருப்பு நிற மையில் கையெழுத்திடக்கூடாது என பரவிய தகவலை மறுத்த மத்திய ரிசர்வ் வங்கி

சனிக்கிழமை, 18 ஜனவரி 2025      இந்தியா
Reserve-Bank 2024-11-17

Source: provided

டெல்லி: காசோலைகளில் எந்தெந்த நிறப் பேனாக்களைப் பயன்படுத்தலாம், பயன்படுத்தக் கூடாது என்பது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களை வெளியிட்டிருப்பதாக வரும் தகவல்கள் போலியானவை என்று தெரிய வந்துள்ளது. முன்னதாக புரளிகள் அதிக வேகத்துடன் பரவும் சமூக வலைதளங்களில், காசோலைகளில் கருப்பு நிற பேனாவில் கையெழுத்திடக் கூடாது என்று ஆர்.பி.ஐ. தடை விதித்திருப்பதாக ஒரு தகவல் பரவி வந்தது. ஆனால், இந்த தகவல் முற்றிலும் பொய்யானது, உண்மையல்ல என்று பி.ஐ.பி.யின் உண்மை அறியும் பிரிவு  தெரிவித்துள்ளது. இது முற்றிலும் தவறான தகவல் என்றும் குறிப்பிட்டிருக்கிறது. காசோலைகளில், எந்த நிறப் பேனாவில் எழுத வேண்டும் என்பது குறித்து ரிசர்வ் வங்கி எந்த வழிகாட்டு நெறிமுறையையும் உருவாக்கி வெளியிடவில்லை என்றும், இது அடிப்படை ஆதாரமற்ற தகவல், இதனை புறந்தள்ளுமாறு மக்களை கேட்டுக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளது. வழக்கமாக, வங்கி காசோலைகளில் நீலம் மற்றும் கருப்பு நிறப் பேனாவில் எழுதலாம் என்பதே பொதுவான விதி. பொதுவாக வங்கிகளின் தரப்பில் ஏதேனும் திருத்தங்களை செய்யவே சிவப்பு நிற இங்க் பயன்படுத்தப்படுவதால், அதனை மக்கள் காசோலைகளில் பயன்படுத்துவதைத் தவிர்த்து விட வேண்டும் என்றும், பென்சில் மற்றும் அழிக்கக் கூடிய இங்க் பயன்படுத்த மட்டுமே இதுவரை தடை இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதைத் தவிர்த்து, பச்சை, ஊதா நிறப் பேனாக்களை மக்கள் பயன்படுத்துவதில் இருந்து தடை இருக்கிறது. இந்த நிறங்களை சில வேளைகளில் வங்கி ஸ்கேன்னிங் இயந்திரங்களால் படிக்க இயலாமல் போகும்போது பிரச்னை எழலாம் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து