முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை

சனிக்கிழமை, 18 ஜனவரி 2025      உலகம்
Tik-Tok 2023 04 04

Source: provided

அமெரிக்கா: அமெரிக்காவில் இன்று முதல் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்படுகிறது. அமெரிக்காவில் சீன நிறுவனத்தின் டிக் டாக் செயலியில் பதிவிடப்படும் தகவல்கள் குறித்து சீனாவுக்கு பகிரப்படுவதாகக் கூறி, பாதுகாப்பு காரணங்களுக்காக டிக் டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடை உத்தரவானது இன்று முதல் அமலில் வந்தது. இந்தத் தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் டிக் டாக் செயலி வழக்கு தொடர்ந்தது. இருப்பினும், அவர்களின் வழக்கைத் தள்ளுபடி செய்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. டிக் டாக் செயலியை தடை செய்வதன் மூலம், கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவதுடன், டிக் டாக் மூலம் வருவாய் ஈட்டி வரும் பலரும் பாதிக்கப்படுவர் என்றும் டிக் டாக் செயலியின் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர். இந்தியாவிலும் பயனர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, 2020 -ம் ஆண்டில் டிக் டாக் செயலி உள்பட 59 சீன நாட்டு செயலிகளை இந்திய அரசு தடை செய்து உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து