முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: கனிமொழி பேட்டி

வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2025      தமிழகம்
Kanimozhi 2023-05-04

Source: provided

சென்னை : பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணிக்கு  மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று தி.மு.க. எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

சென்னையில் தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

பா.ஜ.க. வுடன் கூட்டணி வைத்து அ.தி.மு.க.வுக்கு எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்துள்ளார். பா.ஜ.க. வுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். அவர்கள் பிரிந்துவிட்டதாக சொன்னாலும் கூட்டணி தொடரும் என்பதை சுட்டிக்காட்டினர்.பா.ஜ.க. வுடன் கூட்டணியை அறிவிக்கும் நிர்பந்தத்திற்கு அ.தி.மு.க.வினர் ஆளாக்கப்பட்டுள்ளனர். 

அவர்கள் நடத்திய காசி தமிழ் சங்கமத்தினால் தமிழ் எப்படி வளர்ந்தது என தெரியவில்லை. தமிழுக்காக பா.ஜ.க. என்ன செய்தது.அண்ணா, அம்மையார் ஜெயலலிதாவை தரக்குறைவாக பேசியவரோடு கூட்டணியை அமைத்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமி செயல் தன்னுடைய கட்சி, தமிழ்நாட்டு மக்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகம்.

கல்வி நிதி, வக்பு சட்டம், நீட் ஆகியவற்றை எதிர்ப்பதாக சொன்ன அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன? இதையெல்லாம் பேசியவர்களோடு மேடையில் அமர்ந்திருக்கிறார் அவர்.எடப்பாடி பழனிசாமி மேடையில் பேச கூட உரிமை இல்லாத நிலையில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படுகிறது.தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் பா.ஜ.க. வுக்கு ரத்தின கம்பளத்தை விரித்துள்ளது அ.தி.மு.க.. அ.தி.மு.க. செயலுக்கு தகுந்த பாடத்தை வரக்கூடிய தேர்தலில் மக்கள் தருவார்கள். நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் மீது ஐ.டி, அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறார்கள். தி.மு.க. ஆட்சிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. வரக்கூடிய தேர்தலில் அதை தெளிவாக பார்க்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து