முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்சியில் புதிய பொறுப்பு: முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் திருச்சி சிவா

வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2025      தமிழகம்
CM-3-11-04-2025

Source: provided

சென்னை : கட்சியில் தனக்கு வழங்கப்பட்ட புதிய பொறுப்பை அடுத்து முதல்வர் ஸ்டாலினை திருச்சி சிவா சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பெரியாரின் பெருந்தொண்டர் திருவாரூர் கே.தங்கராசு நூற்றாண்டு விழா சென்னையில் கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. விழாவில் மிக கீழ்தரமான மொழியில் அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் சைவ, வைணவ சமய நம்பிக்கைகளை மிகவும் கீழ்த்தரமாக ஒப்பிட்டு பேசி மக்களின் உணர்வுகளை புண்படுத்தி இருக்கிறார்.

அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், பெண்கள் குறித்து ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடியின் கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அமைச்சர் பொன்முடியிடம் இருந்து பொறுப்பு பறிக்கப்பட்ட நிலையில், கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்து திருச்சி சிவாவை விடுவித்து புதிய பொறுப்பு வழங்கியுள்ளார் தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின். இந்தநிலையில், திமுக துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திருச்சி சிவா அறிவாலயத்தில் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அதுபோது கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளர் தயாநிதிமாறன், எம்.பி., ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து