முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று 11 லட்சம் பேர் எழுதும் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு துவக்கம்

செவ்வாய்க்கிழமை, 25 மார்ச் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச் 26 -  11 லட்சம் மாணவ_மாணவிகள் எழுதும் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு இன்று (புதன்கிழமை) தொடங்கி ஏப்ரல் 9_ந்தேதி வரை நடைபெற உள்ளது..

இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:_

தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவுரையின்படி, மாணவர்களின் நலன்கருதி பல்வேறு புதிய நடைமுறைகள் இவ்வாண்டு தேர்வுத்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி தேர்வு தொடங்கும் நேரம் 45 நிமிடம் முன்னதாக அதாவது 9.15 மணிக்கு மாற்றியமைக்கப் பட்டுள்ளது.

தேர்வறையில் மாணவ_மாணவியரின் மன இறுக்கத்தைப் போக்கி, விடைகளைத் திட்டமிட்டு தேர்வுகளை நன்முறையில் எழுதுவதற்காக, வினாத்தாளினை மாணவ_மாணவியருக்கு வழங்கியவுடன், அதனை முழுமையாகப் படிப்பதற்காக (9.15 மணி முதல் 9.25 மணி வரை) 10 நிமிட கால அவகாசம் வழங்கப்படுகிறது.

விடைத்தாளுடன் இணைக்கப் பட்டுள்ள முகப்புப்படிவத்தில் அச்சிடப்பட்ட தேர்வர்களின் புகைப்படம், பதிவெண் விவரங்களை தேர்வர் சரிபார்த்துக்கொள்ள (9.25 மணி முதல் 9.30 மணி வரை) 5 நிமிட கால அவகாசம் வழங்கப்படுகிறது. தேர்வு நேரம் 9.30 மணி முதல் 12.00 மணி வரை ஆகும்.

மாணவ_மாணவிகளுக்கு விடைத்தாள் வழங்கிய பின்னர், விடைத்தாளில் பூர்த்தி செய்யவேண்டிய தேர்வரின் பதிவெண் முதலான விவரங்களை பதற்றத்தின் காரணமாக தேர்வர்கள் தவறான பதிவுகளை மேற்கொள்வதால், தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு, இவ்வாண்டு தேர்வுத்துறை மாணவரின் புகைப்படம், பதிவெண், பாடம் முதலான விவரங்கள் அச்சிட்ட முகப்புச்சீட்டை விடைத்தாளுடன் இணைத்தே வழங்குகிறது. மாணவர் முகப்புச்சீட்டில் அச்சிடப்பட்ட விவரங்களை சரிபார்த்து கையெழுத்திட்டால் மட்டுமே போதுமானது.

முதன்மை விடைத்தாளில் பக்கங்களின் எண்ணிக்கை 30 பக்கங்களாக இவ்வாண்டு அதிகரிக்கப்பட்டுள்ளதால், தேர்வர்கள் கூடுதல் விடைத்தாள்கள் பெறுவதில் ஏற்படும் காலதாமதம் தவிர்க்கப்படுகிறது. தேர்வர்களின் முன்னிலையில் வினாத்தாள் உறை திறக்கப்பட்டு விநியோகிக்கப்படும்.

தேர்வு மையமாக செயல்படும் பள்ளிகளில், தேர்வு நேரங்களில் அப்பள்ளிகளை சார்ந்த தாளாளர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் தேர்வு நடக்கும் வளாகத்தில் இருக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 11,552 பள்ளிகளிலிருந்து மொத்தம் 10,38,876 மாணவ_மாணவியர்கள் தேர்வெழுத பதிவு செய்துள்ளனர். இவர்களில் மாணவர்கள் 5,30,462 பேர் மாணவியர் 5,08,414 பேர் ஆவர்.

பள்ளி மாணவர்களைத் தவிர 286 தேர்வு மையங்களில் 74,647 தனித்தேர்வர்கள் தேர்வெழுத பதிவு செய்து உள்ளனர்.

மொத்தத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 11 லட்சத்து 13 ஆயிரத்து 523 பேர் எழுதுகிறார்கள்.

தேர்வு எழுதும் மாணவர்களை கண்காணிக்க தமிழ்நாடு முழுவதிலும் 5 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கு.தேவராஜன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 days ago