முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலிங்காவின் அபார ஆட்டத்தால் மும்பை இந்தியன்ஸ் இறுதிக்கு தகுதி

திங்கட்கிழமை, 10 அக்டோபர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, அக்.- 10 - மலிங்காவின் அபார பந்துவீச்சால் மும்பை இந்தியன்ஸ் அணி சோமர்செட்டை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 3-வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் முதலாவது அரைஇறுதியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, நியூ சவுத்வேல்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 2​வது அரைஇறுதியில் ஐ.பி.எல். அணியான மும்பை இந்தியன்ஸ் அணியும், இங்கிலாந்தின் கவுண்டி அணியான சோமர்செட் அணியும் மோதின.  டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்பஜன்சிங் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி பிளிஸ்சார்ட்டும், கன்வாரும் மும்பை அணியின் இன்னிங்சை தொடங்கினார்கள். கன்வாரின் (2 ரன்) பேட்டிங் மும்பைக்கு ஏமாற்றத்தை தந்தது. ஆனால் பிளிஸ்சார்ட் தனது பங்குக்கு வேகமாக ரன்களை சேர்த்தார். அதே சமயம் மறுமுனையில் அம்பத்தி ராயுடு (19 ரன்), பிராங்ளின் (6 ரன்) ஆகியோர் நீnullண்ட நேரம் நீnullடிக்கவில்லை. அரைசதத்தை nullர்த்தி செய்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிளிஸ்சார்ட் 54 ரன்களில் (39 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), முரளிகார்த்திக்கின் சுழற்பந்து வீச்சில் போல்டு ஆனார். அவரைத் தொடர்ந்து 24 ரன்களை பெற்றுத்தந்த கீரன் பொல்லார்ட் (18 பந்து, 2 சிக்சர்) சிறிது நேரம் ரசிகர்களை உற்சாகப்படுத்தி விட்டு பெவிலியன் திரும்பினார்.    கடைசி கட்டத்தில் சூர்யகுமார் யாதவ், திருச்சியை சேர்ந்த சதீஷ் ஆகியோரின் பயனுள்ள பங்களிப்பால் மும்பை அணி சவாலான ஸ்கோரை தொட்டது. குறிப்பாக சோமர்செட்  அணியின் கேப்டன் அல்போன்சா தாமஸ் வீசிய 19​வது ஓவரில் இருவரும் சேர்ந்து 3 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 20 ரன்களை திரட்டினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 5 விக்கெட்இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்தது. சூர்யகுமார் யாதவ் 23 ரன்களுடனும் (19 பந்து, 3பவுண்டரி), சதீஷ் 25 ரன்களுடனும் (12 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர். பின்னர் வெற்றி பெற 161 ரன்கள் இலக்குடன்  ஆடிய சோமர்செட் அணிக்கு, வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா தொடக்கத்திலேயே இரட்டை செக் வைத்தார். அவரது பந்து வீச்சில் பீட்டர் டிரிக்கோ (0), வான்டெர் மெர்வ் (10) கிளீன் போல்டானார்கள். இதைத் தொடர்ந்து கீஸ்வெட்டரும், ஹில்ட்ரெத்தும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருப்பினும் ஸ்கோர் மிதமான வேகத்திலேயே நகர்ந்ததால் நெருக்கடி உருவானது. ஹில்ட்ரெத் 39 ரன்களிலும், அடுத்து வந்த ஜோஸ் பட்லர் 19 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். மறுமுனையில் போராடிய கீஸ்வெட்டர் (62 ரன், 46 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) 19​வது ஓவரில் பிடிகொடுத்து அவுட் ஆனார்.   இதையடுத்து இறுதிகட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி ஓவரில் சோமர்செட்டின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டன. கைவசம் 5 விக்கெட்டுகள் இருந்தன. 20​வது ஓவரை `யார்க்கர் மன்னன்' மலிங்கா வீசினார். அவரது துல்லியமான யார்க்கர் தாக்குதலுக்கு முன்னால் சோமர்செட்டின் பேட்ஸ்மேன்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. காம்ப்டன் (5 ரன்), முரளிகார்த்திக் (0) ஆகியோரின் ஸ்டம்புகளையும் சாய்த்த மலிங்கா கடைசி ஒவரில் வெறும் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து தங்கள் அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். சோமர்செட் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 150 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 10 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 4 ஓவர்கள் பந்து வீசிய மலிங்கா 20 ரன்கள் விட்டு கொடுத்து 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.  

இறுதிப்போட்டியில் மும்பை அணி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago