முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

காகித கேப்ஸ்யூல்

பல் துலக்கும் பற்பசை பிளாஸ்டிக் டியூப்களில் அடைக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக்கால் இன்றைக்கு உலகமே தத்தளித்து வருகிறது. எனவே இதற்கு மாற்றாக கனடாவைச் சேர்ந்த மைக் மெடிகாஃப் (mike medicoff) மற்றும் டாமியென் வின்ஸ் (damien vince) ஆகிய இருவர் காகித கேப்ஸ்யூல்களை கண்டு பிடித்துள்ளனர். காகிதத்தால் ஆன இதில் பற்பசை நிரப்பப்பட்டிருக்கும். அதை வாயில் போட்டு ஒரு கடி... அவ்வளவுதான் கேப்ஸ்யூல் கரைந்து விடும்.. பற்பசை வாயில் நிரம்ப.. ஃப்ரெஷ்ஷால் பல் துலக்க வேண்டியதுதான்... வெகு விரைவில் இந்தியாவுக்கு வரும்.. இனி பற்பசைக்கான பிளாஸ்டிக் தேவையில்லை..

கோடைக்கு நல்லது

முட்டையில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பாஸ்பரஸ் போன்றவை நிறைந்திருக்கின்றன. அவ்வளவு சத்துகள் நிறைந்த முட்டையை கோடைகாலத்தில் சாப்பிட்டால், செரிமான பிரச்சினை ஏற்படும் என்பது உண்மையில்லை. உண்மையில், கோடைகாலத்தில் முட்டை சாப்பிடுவதால் உடல் வெப்பத்தைக் குறைக்கலாம் முட்டையில் உள்ள ஏராளமான ஊட்டச்சத்துகள், கோடையில் உடலின் நீர்ச்சத்தைச் சீராகப் பராமரிக்க உதவுகின்றன. மேலும் முட்டை உடலின் ஆற்றலை நீண்டநேரம் தக்கவைத்து, கோடையில் உடல் சோர்வு, பலவீனத்தைத் தடுக்கிறது. ஆனால் முட்டையின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு வேண்டும்.

ஹைடெக் பாட்டில்

ஆஸ்திரியாவைச் சேர்ந்த பிண்டஸ் எனும் நிறுவனம் வடிவமைத்துள்ள ஹைடெக் வாட்டர் பாட்டில் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி அதனை நீராக மாற்றுகிறது. சூரிய மின்சக்தி உதவியுடன் இயங்கும் இந்த வாட்டர் பாட்டில் ஒரு லேயருடன் இணைக்கப்பட்டுள்ளது.மூன்றுக்கும் மேற்பட்ட அடுக்குகள் கொண்ட அந்த லேயரில் காற்று படும்போது, அதன் வேகம் குறைக்கப்பட்டு, அதிலுள்ள நீர் தனியே பிரித்தெடுக்கப்படுகிறது. நிமிடத்துக்கு ஒரு துளி நீரைச் சேமிக்கும் வடிவில் இந்த வாட்டர் பாட்டில் வடிவமைத்துள்ளது.

நுங்கின் பயன்

நுங்கு சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து அதிகம் கிடைக்கிறது. உடலின் கனிமச்சத்து மற்றும் சர்க்கரையின் அளவை சீராக வைத்து, சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு உதவியாக இருக்கும். இதில் வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற சத்துக்களும் உள்ளது. மேலும், சின்னம்மையினால் ஏற்படும் அரிப்புக்களை தடுத்து, உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளலாம்.

உலகம் முழுவதும் எத்தனை புத்தகங்கள் உள்ளன

கூகுள் அளிக்கும் தகவல்படி 2010 ஆம் ஆண்டு வரை  வெளியிடப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை 129,864,880 மில்லியன் புத்தகங்கள் என கூறப்படுகிறது. இது முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் அதிக எண்ணிக்கையிலானதாகும். எனவே இனி யாரும் எனக்கு படிக்க ஒரு நல்ல புத்தகம் கூடி கிடைக்கவில்லை என்று சொல்ல முடியாதல்லவா.

பனி, Snow

ஆர்க்டிக் பகுதியில் பனியில் உறைந்திருக்கும் 90 லட்சம் சதுர மைல் பரப்பளவு சுமார் 10 லட்சம் ஆண்டுகள் பழமையானவை. ஆர்க்டிக்கின் பெரும்பகுதி இன்னும் முழுமையாக அறியப்படவில்லை. புவி வேகமாக வெப்பமடைந்து ஆர்க்டிக் பனிப்படலம் உருகுவகுதால், அணுக்கழிவுகள், கண்டுபிடிக்கப்படாத வைரஸ்கள், ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு கட்டுப்படாத பாக்டீரியாக்கள் பரவலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 days ago