முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

புற்றுநோய்க்கு தீர்வு

அமெரிக்காவில் உள்ள ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் புற்றுநோயை தடுப்பது சம்மந்தமாக தொடர்ந்து ஆய்வு நடத்தியதில், புற்றுநோய் செல்கள் எப்படி பரவுகிறது என்பதை தற்போது கண்டுபிடித்துள்ளனர். உடலில் புற்றுநோய் செல் உருவானதும் அது ஒவ்வொன்றாக பிளவு ஏற்பட்டு உடல் முழுவதும் பரவுகிறது. அவற்றில் பிளவு ஏற்படாமல் தடுத்துவிட்டால் அதன்பிறகு அந்த செல்கள் மற்ற பகுதிக்கு பரவாது. எனவே புற்றுநோய் ஏற்பட்டிருந்தாலும் அந்த நோயாளி மேற்கொண்டு செல் பரவுதல் இல்லாததால் உயிரிழப்பு ஏற்படாது. இப்போது புதிய மருந்துகள் மூலம் இந்த செல் பரவுதலை தடுத்துவிடலாம் என்று இந்த ஆய்வு குழுவில் இடம்பெற்றுள்ள பேராசிரியர் டேனிப்விரிட்ஸ் கூறுகிறார்.

பெண்களுக்கு முதன் முதலாக வாக்குரிமை அளித்த நாடு எது?

மகளிர் வாக்குரிமைக்கான இயக்கம் முதலில் 1780களில் பிரான்சில் துவங்கியது. பிறகு ஸ்வீடனில் அது பரவியது. 1756-ல் அமெரிக்காவின் ஒரு சின்ன பகுதியான மாஸசூட்ஸில் மட்டும் இது அமலுக்கு வந்தது. (உள்ளூர் முனிசிபாலிடி தேர்தலில் மட்டும் வாக்களிக்கும் உரிமை). பிறகு நியூ ஜெர்ஸியில் பெண்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் பெண்களுக்கு நாடு தழுவிய வாக்குரிமை அளிக்க நியூசிலாந்து முன்வந்தது. 1893 செப்டம்பர் 19 உலக மகளிர் திருப்புமுனைகளில் ஒரு முக்கியமான நாள். அன்றுதான் மகளிருக்கான வாக்குரிமை சட்டமாக்கப்பட்டது. அந்த ஆண்டு நவம்பர் 28 அன்று நடைபெற்ற தேர்தலில் பெண்கள் வாக்களித்தனர். இந்தியாவில் முதன்முறையாக 1951-1952-ல் நடந்த பொதுத் தேர்தலிலேயே வாக்களிக்கும் உரிமை பெண்களுக்குக் கிடைத்தது. முன்னதாக 1920-ல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. தொடர்ந்து, 1921-ல் சென்னை, பம்பாய் மாகாணங்களில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. 

பாம்புக்கு உதவி

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் மேத்யூ என்பவர், சுமார் 2.5 மீட்டர் நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று சாலையை கடக்க உதவியுள்ளார். போக்குவரத்து மிகுந்த பகுதி என்பதால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் அந்த மலைப்பாம்பை ஏற்றிவிடாதபடி, அவர் உடனடியாக பாம்புக்கு அரணாக சாலையில் படுத்து அது கடந்து செல்லும் வரை இவ்வாறு 5 நிமிடங்கள் இருந்துள்ளார்.

ஷூக்களின் நீளம் என்ன வென்று உங்களுக்கு தெரியுமா?

ஒரு கால கட்டத்தில் அதிகாரத்தின் குறியீடாகவும், செல்வந்தர்களின் அடையாளமாகவும் ஷூக்கள் அணியும் பழக்கம் நிலவி வந்தது நமக்கு தெரியும். பின்னர் போர் வீரர்களும், உயர் அதிகாரிகளும் அவற்றை அணிய தொடங்கினர். இன்றைக்கு விற்பனை பிரதி நிதி தொடங்கி அனைத்து தரப்பினரும் அணியும் பேஷன் பொருளாக ஷூ மாறியுள்ளது. மத்திய கால கட்டத்தில், அதாவது 14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 15 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ஷூக்கள் சுமார் 2 அடி நீளம் கொண்டவையாக தயாரிக்கப்பட்டன என்றால் ஆச்சரியம் தானே...இவை மென்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக கேசம், கம்பளி, இறகு போன்றவை திணிக்கப்பட்டு தயார் செய்யப்பட்டன. தற்போது இந்த வகை ஷூக்கள் விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகங்களில் மட்டுமே காணக்கிடைக்கின்றன.

உலக சரித்திரம் விரல் நுனியில்

இணையத்தில் இயங்கும் நூலகங்களில் ஒரு வியக்கத்தக்க பயனுள்ள நூலகம் டிஜிட்டல் மீடியா நூலகம். அதன் லிங்க்  http://www.wdl.org/en/. அது என்ன டிஜிட்டல் மீடியா நூலகம் என்று வியப்பாக இருக்கிறதா? ஆம், இதில் உலக சரித்திரத்தின் பதிவுகளை டிஜிட்டல் வடிவில் பதிந்து தருகிறது.உலகெங்கும் நம் நினைவிற்குச் சிக்காத நாட்களிலிருந்து கிடைத்த காட்சிகள், படங்கள், ஓசைகள், சரித்திர, கலாச்சாரக் குறிப்புகள் ஆகிய அனைத்தையும் டிஜிட்டல் மீடியாக்களாக இந்த ஆன்லைன் நூலகத்தில் பதிவுகளாகக் கிடைக்கின்றன.இந்த நூலகத்திற்கு உங்கள் கம்ப்யூட்டர் வழியே சென்று, உலகின் அனைத்து நாடுகள், கலாச்சாரம், சரித்திரம் குறித்தவற்றைத் தேடிப் பெற்று அறிந்து கொள்ளலாம். மொழிகள் குறித்தும் அறிந்து கொள்ளலாம்.

தனிநபரின் பெயர்

அமெரிக்கோ வெஸ்புகி என்பவர் 1499-ல் அமெரிக்காவை அடைந்தவர். இவர், அமெரிக்கா ஆசியாவை சேர்ந்த பகுதி அல்ல, அது ஒரு தனி கண்டம் என்பதை கண்டறிந்தார். 1507-ல் ஜெர்மனியை சேர்ந்த மார்டின் என்பவர் உலக வரைப்படத்தில் அமெரிக்காவை சேர்த்த போது வெஸ்புகியின் முன் பெயரான அமெரிக்கோ என்பதையே அமெரிக்கா என பெயர் வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 days ago