முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சுவாச கோளாறுகள் ஏற்படாமல் தடுப்பது எப்படி?

 

  1. சளி தொந்தரவு இருந்தால் சுவாச  கோளாறுகள் வரும்.
  2. சுவாச கோளாறுகள் ஏற்பட்டால் நமது உடலில்ஆக்ஜிசன் அளவு குறைந்து பல்வேறு நோய்கள் வர காரணமாக அமைகிறது.
  3. ஈரல் குறைபாடு காரணமாகவும்,ஆஸ்துமா தொந்தரவினாலும் சுவாச கோளாறுகள் வருகிறது.
  4. செரிமானக் கோளாறு இருந்தாலும் சுவாச  குறைபாடுகள் ஏற்படும்.
  5. புகை பிடித்தல் காரணமாகவும் சுவாச கோளாறுகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
  6. குளிர் பிரதேசத்தில் இருந்தாலும் மூக்கடைப்பு,மூச்சு திணறல் வரும்.
  7. ஒற்றை தலைவலி இருந்தாலும் சுவாச கோளாறுகள் வருகிறது.
  8. காலை எழுந்த உடன் 20 முறை குதித்து வாயை முடி மூக்கில் சுவாசம் செய்ய முடிந்தால் சுவாச கோளாறுகள் இல்லை என உணரமுடியும்.
  9. நாம் குதித்து முடிந்த பின்னர் வாய்  மூலம் மட்டுமே மூச்சு விட்டால் சுவாச கோளாறுகள் இருப்பதை அறிய முடியும்.
  10. இதற்கு சித்த வைத்தியத்தில் மிக எளிய மருந்துகள் உள்ளது.
  11. சுக்கு 25 கிராம்,மல்லி 25 கிராம்,அரப்பு 15 கிராம்,பூங்கற்பூரம் சிறிதளவு மிளகு 5 கிராம்,துளசி சிறிதளவு,ஆடுதொடா இலை சிறிதளவு ஆகியவற்றை  500 மில்லி தண்ணீரில் போட்டு 250 மில்லி ஆகும் வரை  நன்கு கொதிக்க வைத்து குழந்தைகளுக்கு 5 மில்லியும்,பெரியவர்கள்10 மில்லியும் அருந்தி பின்னர் சூடு நீர் பருகி வந்தால் நாள்பட்ட சுவாச கோளாறுகளும் குணமாகும்.(தொடர்ந்து 48 நாட்கள் இந்த மருத்துவ முறையை பின்பற்ற வேண்டும்) 
  12. வேறு மருந்து களை பயன்படுத்திக்கொண்டு இருந்தாலும்,இந்த மருந்தையும் எடுத்துக்கொண்டு பயன் பெறலாம்.
  13. இந்த மருந்தை பயன்படுத்தும் போது உடனே சளி கரைந்து வெளியேறி சுவாச குறைபாடுகள் குறைவதை உணர முடியும்.
  14. நம் தினமும் உணவில் பயன்படுத்தும் மிளகு சுவாச கோளாறுகளுக்கு நல்ல மருந்தாக உள்ளது.
  15. வறட்டு இருமல் தீர 5 மிளகு ,சிறிதளவு தேங்காய் மற்றும் சிறிதளவு பொரிகடலை சாப்பிட்டு சூடான நீர் அருந்த நோய் குணமாகும் .
  16. வெறும் மிளகு மட்டும் சாப்பிட்டால் அல்சர் வர வாய்ப்புள்ளதால் உடன் பொரிகடலை மற்றும் தேங்காய்யை சேர்த்து சாப்பிட வேண்டும்.
  17. குறட்டை விடுவதையும் இந்த மருந்து கட்டுப்படுத்தும்.
  18. உடற்பயிற்சி செய்யும் போது வாய்யை முடி மூக்கின் மூலம் சுவாசித்தல் நுரையீரல் பலமடைந்து  சுவாச கோளாறுகள் தீரும்.
  19. நுரையீரல் மற்றும் இருதயத்தை  பலமாக வைத்துக்கொண்டால் சுவாச கோளாறுகள் தீரும்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 days ago