முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிர்க்கட்சி தலைவராக அங்கீகரிக்குமாறு சபாநாயகரிடம் ஜெகன் மோகன் வலியுறுத்தல்

புதன்கிழமை, 26 ஜூன் 2024      இந்தியா
Jagan-Mohan-Reddy 2023-06-0

Source: provided

அமராவதி :  ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தன்னை எதிர்க்கட்சித் தலைவராகவும், அவரது கட்சியை முதன்மை எதிர்க்கட்சியாகவும் அங்கீகரிக்குமாறு சட்டப்பேரவை சபாநாயகர் அய்யண்ணபத்ருடுவிடம்  கோரிக்கை விடுத்துள்ளார்.

 இது குறித்து சபாநாயகருக்கு அவர் எழுதிய கடிதத்தில், 

எதிர்க்கட்சியில் எந்த கட்சி அதிக இடங்களைப் பெறுகிறதோ அந்த கட்சி முதன்மை எதிர்க்கட்சியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கட்டளையிடுகிறது  என்று  கூறியுள்ளார். 

பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை வழங்க 10 சதவீத இடங்கள் தேவை என்று எந்த சட்டமும் கூறவில்லை என்று கூறிய அவர், பாராளுமன்றத்திலோ அல்லது மாநில சட்டசபையிலோ அத்தகைய நடைமுறை பின்பற்றப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

ஜெகன் மோகன் ரெட்டியின் கூற்றுப்படி, சமீபத்தில் அமைச்சர்கள் பதவியேற்ற பிறகு அவரை சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்க வைத்தது மரபுக்கு எதிரானது. தனக்கு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை வழங்குவதில்லை என ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி, தெலுங்கு தேசம், பா.ஜ.க., ஜனசேனா ஆகிய கட்சிகள் ஏற்கனவே முடிவு செய்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

பிரதான எதிர்க்கட்சியாக அங்கீகாரம் பெற்றால், மக்கள் பிரச்னைகளுக்கு அவையில் குரல் கொடுக்க முடியும். இந்த சூழ்நிலைகளை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று சபாநாயகரிடம்  ஜெகன்மோகன் ரெட்டி கேட்டுக்கொண்டுள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 day 18 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 day 18 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து