முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து சமுதாயங்களின் நலனுக்காக பணியாற்றுங்கள்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி

புதன்கிழமை, 26 ஜூன் 2024      இந்தியா
Mallikarjuna-Karke 2023 02

பெங்களூரு, கர்நாடகா மாநிலம் பீதர் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் சாகர் கன்ட்ரே வெற்றிக்கு, முஸ்லிம் ஓட்டுகளே காரணம் என, கூறிய அமைச்சர் ஜமீர் அகமது கானுக்கு, கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். எம்.பி.,க்கள் அனைத்து சமுதாயங்களின் நலனுக்காக பணியாற்ற வேண்டும் என கார்கே வலியுறுத்தி உள்ளார்.

சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், பீதர் லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட சாகர் கன்ட்ரே வெற்றி பெற்றிருந்தார். 'இவருக்கு முஸ்லிம் வாக்காளர்கள் ஓட்டு போட்டதால், வெற்றி பெற்றார்' என, வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் கூறியது சர்ச்சையானது.

இது குறித்து, காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பெங்களூரில் அளித்த பேட்டி: மக்கள் பிரதிநிதி ஒருவர் வெற்றி பெற்றார் என்றால், அவருக்கு அனைத்து சமுதாயங்களின் மக்களும் ஓட்டு போட்டிருப்பர். வெற்றி பெற்ற பின், தனக்கு எந்த சமுதாயத்தினர் ஓட்டு போட்டனர், யார் போடவில்லை என, ஆலோசித்தபடி காலத்தை கடத்துவது சரியல்ல. தேர்தலில் வெற்றி பெற்ற பின், அமர்ந்திருக்க கூடாது. அனைத்து சமுதாயங்களின் நலனுக்காக பணியாற்ற வேண்டும். மக்களுக்கு சேவை செய்வதற்காகவே, மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 day 18 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 day 18 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து