முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டொனால்டு டிரம்புடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சந்திப்பு

சனிக்கிழமை, 27 ஜூலை 2024      உலகம்
Trump-Netanyahu 2024 07 27

Source: provided

வாஷிங்டன் : இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, நேற்று டொனால்டு டிரம்பை அவரது எஸ்டேட்டில் வைத்து சந்தித்து பேசினார். 

பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டு அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்து போர் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

அதை தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, நேற்று டொனால்டு டிரம்பையும் அவரது எஸ்டேட்டில் வைத்து சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பில் காசாவில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் குறித்து  உரையாடியதாக தெரிகிறது.  இந்த பிரச்சனையை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர நெதன்யாகுவிடம் டிரம்ப் வலியுறுத்தியதாக தெரிகிறது.

ஆனால் அதற்கு நெதன்யாகு திட்டவட்டமாக மறுத்துள்ளார் என்றும் எஸ்டேட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் சமீபத்தில் நடந்த  துப்பாக்கிச்சூட்டில் இருந்து டிரம்ப் உயிர் பிழைத்த நிலையில் அவரது காதில் குண்டு பாய்ந்ததால் ஏற்பட்ட காயம் குறித்தும் நெதன்யாகு கேட்டறிந்தார். அப்போது தனது காதில் இருந்த புண்ணை நெதன்யாகுவுக்கு காட்டி டிரம்ப் விளக்கம் அளித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து