முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுற்றுலா செல்ல ஆபத்தான நகரங்கள் பட்டியலில் 2-வது இடம் பிடித்த கராச்சி

சனிக்கிழமை, 27 ஜூலை 2024      உலகம்
Karachi-city 2024 07 27

Source: provided

 வாஷிங்டன் : சுற்றுலா செல்வதற்கு ஆபத்தான நகரங்கள் குறித்து போர்ப்ஸ் இதழ் 3 நகரங்களின் பெயர்களை வெளியிட்டு உள்ளது. அது பாகிஸ்தானின் கராச்சி 2-வது இடத்தில் உள்ளது.

குற்றச்செயல்கள், வன்முறை, பயங்கரவாத அச்சுறுத்தல், இயற்கை பேரிடர்கள், பொருளாதார சீர்குலைவு ஆகியவற்றால், சுற்றுலா பயணிகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து, ஆபத்தான 3 நகரங்கள் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டு உள்ளது.

100 புள்ளிகள் அடிப்படையாக வைத்து வெளியிடப்பட்டுள்ள அந்த பட்டியலில், வெனிசுலாவின் கராகஸ் நகரம் முதலிடத்தில் உள்ளது. இந்நகர் 100 புள்ளிகளை பெற்றுள்ளது. 93.12 புள்ளிகளுடன் கராச்சி நகரம் 2-வது இடத்தில் உள்ளது. 3-வது இடத்தில் மியான்மர் தலைநகர் யாங்கூன் 91.67 புள்ளிகளுடன் உள்ளது. இவ்வாறு அந்த பட்டியலில் கூறப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில் கராச்சி செல்பவர்கள், அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளதாக பாகிஸ்தான் ஊடகம் கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து