முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: ராணுவ வீரர் மரணம் : மேஜர் உட்பட 4 பேர் காயம்

சனிக்கிழமை, 27 ஜூலை 2024      இந்தியா
Kashmir

Source: provided

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரின் குப்வாரா பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே நேற்று தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ராணுவ வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார். மேஜர் ரேங்க் அதிகாரி உட்பட நான்கு பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவரும் கொல்லப்பட்டார்.

மாவட்டத்தின் எல்லைக்கட்டுப்பாடு கோடு வழியாக பாகிஸ்தானின் பார்டர் ஆக்ஷன் டீம் (பேட்) நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலை இந்திய ராணுவம் முறியடித்த போது இந்தச் சம்பவம் நடந்தது. பாகிஸ்தான் ராணுவத்தின் கமாண்டேக்கள் மற்றும் தீவிரவாதிகள் அடங்கிய குழு முன்பு எல்லைக்கட்டுப்பாட்டு கோடு வழியாக எல்லை தாண்டியதாக தெரிய வருகிறது.

கடந்த 2 நாட்களில் குப்வாராவில் நடந்த 2-வது தாக்குதல் சம்பவம் இது. மாவட்டத்தின் காம்காரி பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை தொடந்து அங்கு ராணுவம் தேடுதல் வேட்டையை தொடங்கியது. 

சம்பவ இடத்தில் துப்பாக்கிச்சூடு தொடர்ந்ததால், காயம்பட்ட வீரர்கள் சம்பவ இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக ராணுவம் தெரிவித்தது.  இந்திய ராணுவத்துக்கு எதிராக எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தானின் பார்டர் ஆக்ஷன் குழு நடத்திய தாக்குதலை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. 

தாக்குதல் நடந்திய அக்குழுவில் பாகிஸ்தானின் வழக்கமான ராணுவ குழுவினருடன், தீவிரவாதிகளுடன் நெருக்கமாக பணி புரியும் அவர்களின் எஸ்.எஸ்.ஜி. கமாண்டோக்களும் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது என்று ராணுவம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த  24-ம் தேதி அன்று குப்வாராவின் லோலாப் பகுதியில் இரவில் நடந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தினர் அடையாளம் தெரியாத தீவிரவாதி ஒருவரை சுட்டுக்கொன்றனர். இந்த தாக்குதலில் இந்திய வீரர் ஒருவரும் உயிரிழந்தார்.

தகவல் அறிந்தவர்களின் கூற்றுப்படி, 40 முதல் 50 பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஜம்மு மற்றும் காஷ்மீரின் மலைப்பாங்கான பகுதிகளில் ஊடுருவி உள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்தியா ராணுவம் பரந்த அளவிலான தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை இந்தப் பகுதிகளில் நடத்தி வருகிறது.

இந்த பகுதிகளில் ஊடுருவி இருக்கும் தீவிரவாதிகள் அதிக பயிற்சி பெற்றவர்கள் என்றும், அவர்களிடம் இரவிலும் பார்க்கக்கூடிய சானம் பொருத்தப்பட்ட அமெரிக்க தயாரிப்பான எம்-4 கார்பைன் ரைபில் உள்ளிட்ட அதி நவீன ஆயுதங்கள் இருப்பதாகவும் தெரியவருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து