முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

சனிக்கிழமை, 27 ஜூலை 2024      இந்தியா
Kashmir 2023 04 09

Source: provided

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதில் ஒரு பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்த நிலையில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் பலத்த காயமுற்றனர்.

கடந்த சில தினங்களாக ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்து வருகிறது. சமீபத்தில், கதுவா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பல்வேறு இடங்களில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் களத்தில் இறங்கி உள்ளனர்.

இந்நிலையில், குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அப்பகுதியில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.

உடனே பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் பயங்கரவாதி ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் ஒரு பாதுகாப்பு படை வீரரும் உயிரிழந்தார். 4 பாதுகாப்பு படை வீரர்கள் பலத்த காயமுற்றனர். அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து