முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியானாவை வளமான, தன்னிறைவு கொண்ட மாநிலமாக மாற்றுவேன் : முதல்வர் நயாப்சிங் சைனி உறுதி

வெள்ளிக்கிழமை, 18 அக்டோபர் 2024      இந்தியா
Nayab-Singh-Saini 2024-10-1

Source: provided

சண்டிகர் : அரியானாவை சிறந்த, வளமான மற்றும் தன்னிறைவு கொண்ட மாநிலமாக மாற்றுவேன் என முதல்வர் நயாப் சிங் சைனி தெரிவித்தார்.

அரியானா முதல்வராக பா.ஜ.க.வின் நயாப் சிங் சைனி இரண்டாவது முறையாக நேற்று முன்தினம் பதவி ஏற்றுக் கொண்டார். அவருடன் இரு பெண்கள் உட்பட 13 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். அதை தொடர்ந்து நேற்று  நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அம்மாநில முதல்வர் சைனி பேசியதாவது,

எங்களது அரசு பெண்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் செயல்படும். குற்றவாளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். மாநிலத்தை விட்டு வெளியேறுங்கள். கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று கூறினார். 

முன்னதாக, அவர்  தனது டுவிட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ள பதிவில், அரியானா மாநிலத்தில் தனது 2.80 கோடி குடும்ப உறுப்பினர்களுக்கு அயராது சேவை செய்வதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டு, மாநிலத்தின் தலைமை ஊழியராகப் பொறுப்பேற்றுள்ளேன்.

அரியானாவை சிறந்த, வளமான மற்றும் தன்னிறைவு கொண்ட மாநிலமாக மாற்ற அனைத்து முயற்சிகளும் எடுப்பேன்.  பிரதமர்  மோடியின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், முழு பெரும்பான்மையுடன் எங்களின் அரசாங்கம் சேவை செய்யும். நல்லாட்சி, சமத்துவம், செழிப்பு மற்றும் ஏழை நலனுக்காக அரசு செயல்படும். இவ்வாறு அவர் அந்த பதிவில்  அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து