முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உணவக உரிமையாளர் தாமாக முன்வந்து மன்னிப்பு கேட்டார்: பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் விளக்கம்

வெள்ளிக்கிழமை, 13 செப்டம்பர் 2024      தமிழகம்
Vanathi 2023 06 13

சென்னை, உணவக உரிமையாளர் ஜிஎஸ்டி குறித்து பேசியதற்கு, அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. ஆணாக இருந்திருந்தால் இதுபோன்ற சூழல் ஏற்பட்டு இருக்குமா என்று கேள்வி எழுப்பிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன். உணவக உரிமையாளர் தாமாக முன்வந்துதான் மன்னிப்புக் கோரினார் என்றும் விளக்கமளித்துள்ளார்.

கோவையில் ஜிஎஸ்டி பற்றி நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா ஹோட்டல் நிறுவனர் சீனிவாசன் கேள்வி எழுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனைத் தொடர்ந்து, மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா ஹோட்டல் நிறுவனர் சீனிவாசன் மன்னிப்புக் கேட்கும் வீடியோ தற்போது அகில இந்திய அளவில் சமூக ஊடகங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், இது தொடர்பாக கோவை தெற்கு எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது: ஒரு பெண் எம்.எல்.ஏ. உங்கள் கடையில் சாப்பிட்டதை எப்படி பொது வெளியில் கூறலாம்? இது முறையா? என்றுதான் உணவக உரிமையாளரிடம் மத்திய நிதியமைச்சர் கேட்டார். உணவக உரிமையாளர் தாமாக முன்வந்துதான் மன்னிப்புக் கோரினார். பா.ஜ.க. தரப்பு யாரையும் மிரட்டவில்லை. ஜிஎஸ்டி குறித்த கேள்விக்கு பதிலளிக்கத்தான் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

நான் அவர் கடையில் ஜிலேபி சாப்பிட்டதும் இல்லை, சண்டை போட்டதும் இல்லை என்று அங்கே கூறியிருக்க முடியும். ஆனால் பொதுவெளியில் அதைப்பற்றி நான் எதுவும் பேசவில்லை. அரசியலில் பெண்களுக்கு சமவாய்ப்புகளோ, சமமரியாதை இருக்கிறதா என்று கேட்டால், நான் இல்லையென்றுதான் சொல்லுவேன். அதே மேடையில் ஒரு ஆண் அமைச்சர், ஆண் எம்.எல்.ஏ. இருந்து இருந்தால் இதுபோன்ற பேச்சுகள் வருவதற்கு வாய்ப்பு ஏற்பட்டு இருக்குமா? பெண் அரசியல் தலைவர்கள் போகும்போதுதான் அவர்களை சூழ்ந்துகொண்டு கேள்விக் கேட்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து